Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் ..

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் ..

By: Monisha Sat, 09 July 2022 7:37:46 PM

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் ..

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று பழமொழியும் உள்ளது.
கோடைகாலத்தில் நாம் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழங்ளில் ஒன்று தர்பூசணி. அதிகமாக அதை தான் எடுத்துக் கொள்வோம்.ஏனெனில் இதில் அதிக அளவு தண்ணீர் சத்து இருப்பதால் உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.

ஆனால் அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அஜீரணக் கோளாறு முதல் கல்லீரல் தொற்றுக்கள் வரை நிறைய உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


health,problems,watermelon,eat ,பழம், தர்பூசணி,பிரெச்சனை, உடல்,

அதிகமாக தர்பூசணி பழத்தை எடுத்துக் கொள்ளும்போது, நிறைய ஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.அஜீரணக் கோளாறு ஏற்படும்போது டயேரியா, வயிறு உப்பசம், மந்தம், குமட்டல், வாயுக்கோளாறுகள் ஆகியவை ஏற்படும்.தர்பூசணி ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்பவர்கள் அதிக அளவில் தர்பூசணி பழங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

தர்பூசணி பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது தான். ஆனாலும் அதிலுள்ள அதிகப்படியான பொட்டாசியத்தால் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, கார்டியோ வாஸ்குலார் பிரச்சினைகள், மோசமான நாடித்துடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

Tags :
|