Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பெண்கள் அணியும் லெக்கிங்ஸால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்

பெண்கள் அணியும் லெக்கிங்ஸால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்

By: Karunakaran Mon, 07 Sept 2020 6:24:15 PM

பெண்கள் அணியும் லெக்கிங்ஸால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்

சில வருடங்களுக்கு முன்பு வரை இளம் பெண்களிடம் மட்டுமே மவுசு பெற்றிருந்த லெக்கிங்ஸ், தற்போது நடுத்தர வயது பெண்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிடுகிறது. மேற்கத்திய நாட்டு பெண்களின் விருப்ப உடை. வருடத்தின் பெரும்பகுதி நாட்களை குளிரில் செலவிடும் அவர்கள் தங்கள் சருமத்தில் சூட்டை தக்கவைத்துக் கொள்வதற்காக லெக்கிங்சை அணிந்து வருகிறார்கள். உடற்பயிற்சிக்கும் அது ஏற்ற உடையாக கருதப்பட்டதால், எல்லா நாட்டு பெண்களும் அதனை விரும்பத் தொடங்கினர்.

அதன்பின், எல்லா காலநிலையிலும், எப்போதும் அணிந்துகொண்டிருக்கிறார்கள். உடலோடு ஒட்டி இருப்பதால் பயணத்திற்கு ஏற்றதாகவும் பெண்கள் இதனை கருதுகிறார்கள். ‘பிட்-இன்-ஷேப்’ என்பது லெக்கிங்சின் அடிப்படையான விஷயமாக இருப்பதால், இளம்பெண்கள் இதனை அதிகமாக விரும்புகின்றனர். கால்களில் பாதிவரை உள்ள லெக்கிங்ஸ் தான் பெண்களை அதிகமாக கவர செய்கின்றன.

health problem,leggings,worn,women ,உடல்நலப் பிரச்சினை, லெகிங்ஸ், அணிதல்,பெண்கள்

கோடைகாலத்தில் பெண்களுக்கு அதிகம் வியர்க்கும். வியர்வையை ஓரளவு உறிஞ்சி எடுக்கும் தன்மை லெக்கிங்ஸ்க்கு இருந்தாலும், அது அதிக நேரம் உடலை இறுக்கிக்கொண்டிருப்பது, காற்றை சருமத்தில் புகவிடாமல் தடுத்துவிடுகிறது. இதனால் கால் களின் இடுக்குப்பகுதிகளில் வியர்வை தங்கி, பூஞ்சான் உருவாகும். வெளியே செல்லும்போது பயன்படுத்தினாலும் பெண்கள் வீட்டிற்கோ, ஆஸ்டலுக்கோ திரும்பிய பிறகாவது சருமத்தில் காற்றுபடும்படியான தளர்வான ஆடைகளை அணியவேண்டும்.

இடுப்பு, பின்பகுதி, கால்கள் போன்றவைகளின் அளவுக்கு தக்கபடியானதை வாங்குவது நல்லது. குண்டான உடல்வாகு கொண்டவர்கள் அதிக இறுக்கம் கொண்ட லெக்கிங்சை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. பெண்களில் சிலர் ஜீன்ஸ் துணியில் தயார் செய்யப்படும் ‘லெக்கிங்ஸ்’ வகையான ‘ஜெக்கிங்ஸ்’ அணிகிறார்கள். முடிந்த அளவு அதனை தவிர்க்கவேண்டும். இறுகிய ஜீன்ஸ் அணிவதும் பெண்களின் உடலுக்கு ஏற்றதல்ல. அது அவர்களது இனப்பெருக்கத்திறனை பாதிக்கும். வியர்வை உறிஞ்சப்படாததால் பூஞ்சை தொற்று ஏற்படுவதும் அதிகரிக்கும். வளரிளம் பருவ பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், அது அவர்களது உடல் வளர்ச்சிக்கே கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

Tags :
|