உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பழ சாலட்
By: Nagaraj Sat, 01 Oct 2022 7:04:26 PM
சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பழ சாலட் செய்து சாப்பிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உடல் நலனையும் காத்திடுங்கள்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 2 அல்லது 3ஆப்பிள் - 1ஆரஞ்சு - 2திராட்சை - 1 கொத்துமாதுளை - 1மாம்பழம் - 1செர்ரிப் பழம் - 1 அல்லது 2எலுமிச்சை - 1உலர்ந்த திராட்சை - சிறிதளவுசர்க்கரை - 3/4 அல்லது 1 கோப்பை
செய்முறை: அனைத்து பழங்களையும் சுத்தம் செய்து தோல் நீக்கி ஒரே அளவாக நறுக்கிக் கொள்ளவும். ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றை நறுக்கிய உடன் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சேர்க்கவும். இதனால் அப்பழங்கள் கறுத்துப் போகாமல் இருக்கும்.
அனைத்து பழங்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாகக் கலந்து கொள்ளவும். சர்க்கரையில் கொஞ்சம் நீர் சேர்த்து லேசாக சூடாக்கவும். சர்க்கரைப் பாகுடன் பழங்களைச் சேர்த்து குளிர வைத்து பரிமாறவும். உடலுக்கும் ஆரோக்கியம்.