Advertisement

கோடை வெயிலை சமாளிக்க சில யோசனைகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 23 Mar 2023 10:46:27 PM

கோடை வெயிலை சமாளிக்க சில யோசனைகள் உங்களுக்காக!!!

சென்னை: கோடை வெப்பத்தை சமாளிக்கலாம் வாங்க... பொதுவா, பிப்ரவரி மாதத் தொடக்கத்திலேயே சுட்டெரிக்க ஆரம்பிக்கும் வெயிலானது, இந்த வருடம் கொஞ்சம் லேட்டா சுட ஆரம்பிச்சிருக்கு. அதன் தாக்குதலிலிருந்து தப்பிக்க பின் வரும் டிப்ஸ்களைப் பின்பற்றி, ஆரோக்கியம் காப்போம்:

வெளி வேலைகளை சூரிய வெப்பம் ஏறும் முன்பு அல்லது வெப்பம் இறங்க ஆரம்பித்த பின்பு செய்து முடிக்கப் பாருங்க. குடை எடுத்துச் செல்ல மறக்கவே மறக்காதீங்க. அதை ஒரு சுமையா எண்ண வேண்டாம். குளிர்ச்சி தரும் நல்ல தரமான கூலிங் கிளாஸ் அணியலாம்.

summer,heat,watermelon,foods,water,coolness ,கோடை, வெப்பம், தர்பூசணி, உணவுகள், தண்ணீர், குளுமை

நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் அல்லது உரித்த ஆரஞ்சு சுளைகளை ஒரு டப்பாவில் போட்டு கை வசம் வச்சிக்கோங்க. தாகம் தீர்க்கும், எனர்ஜியும் தரும். ஒரு பாட்டிலில் நீர் நிரப்பி பையில் வச்சுக்கோங்க. தேவைப்படும்போது நீர் இருக்கும் இடம் தேடி அலைய வேண்டாம்.

வயதானவர்களையும் குழந்தைகளையும் வெயிலில் வெளியே அனுப்புவதை தவிர்க்கவும். வெளியில் இருக்கையில் பசி வந்தால், லைட்டா தயிர் சாதம் எடுத்துக்கலாம் அல்லது, சுகாதார முறையில், தோல் சீவி நறுக்கி, ஆங்காங்கே விற்கப்படும் கலவையான பழத் துண்டுகள் மற்றும் தர்பூசணித் துண்டுகளை வாங்கிச் சாப்பிட்டு பசியாறலாம்.

எண்ணையில் வதக்கிய, பொரித்த உணவுகளைத் தவிர்த்தால், வயிற்றுப் பிரச்சனை வராது.

Tags :
|
|
|
|