Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • எரிச்சலூட்டும் வியர்க்குருவை விரட்ட சில இயற்கை வழிமுறைகள்

எரிச்சலூட்டும் வியர்க்குருவை விரட்ட சில இயற்கை வழிமுறைகள்

By: Nagaraj Fri, 31 Mar 2023 11:06:22 AM

எரிச்சலூட்டும் வியர்க்குருவை விரட்ட சில இயற்கை வழிமுறைகள்

சென்னை: கோடை காலம் வந்துவிட்டாலே, அனைவரையும் எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்று வியர்க்குரு. வியர்க்குருவை விரட்டும் பாட்டி வைத்தியங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

கோடைக்காலம் துவங்கி, வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் நாம் மன்றாடி வருகிறோம். பத்து நிமிடத்திற்கு மேல் வெயிலில் நின்றாலே யில் நனைந்ததுபோல வியர்வையால் நனைந்துவிடுகிறோம். வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் படையெடுக்கும் நோய்கள்.

உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, வியர்வைச் சுரப்பிகள் உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேறும். வியர்வை சுரப்பியின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் வியர்க்குரு உருவாகிறது. இதை, `வேர்க்குரு’ அல்லது `வியர்க்குரு’ (Prickly Heat) என்கிறோம்.

இது கோடை காலத்தில் ஏற்படும் தொந்தரவு தவிர வியாதி அல்ல. இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற பழக்கங்களாலும் ஏற்படலாம்.

sweat,root,nungu,heat,summer,diseases ,வியர்வை, வேர்க்குரு, நுங்கு, வெப்பம், கோடைக்காலம், நோய்கள்

இதற்கு மஞ்சள் மற்றும் அறுகம் புல் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதனை உடலுக்கு தேய்த்து குளித்து வர வெப்ப சொறி நீங்கும். அல்லது மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.

சிறிதளவு நெல்லிக்காய் உடன், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் (Terminalia bellirica) சேர்த்து நன்கு பொடியாக்கி, அதனை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, பின்னர் ஆற விட்டு குடித்து வர வெப்பத்தால் ஏற்படும் சொறி குறையும். இயற்கை பானங்கள் : இளநீர், கருப்புச்சாறு, வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி சாறு போன்றவற்றை பருகுவதால், உடலின் நீரிழப்பு சரி செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்த பானங்கள் வெப்ப சொறியினை குறைக்க உதவுகிறது.

கோடை காலத்தில் கிடைக்கும் பனம் நுங்கு, உடல் உஷ்ணம் மற்றும் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த உதவுகிறது. அந்த வகையில், வெப்ப சொறியினை போக்க பனம் நுங்கு சாப்பிடலாம். அல்லது கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

Tags :
|
|
|
|
|