Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீள சில எளிய வழிமுறை

புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீள சில எளிய வழிமுறை

By: Nagaraj Mon, 11 July 2022 6:54:09 PM

புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீள சில எளிய வழிமுறை

சென்னை: மிகவும் மோசமான அளவிற்கு மனிதனை அடிமைப்படுத்தும் பழக்கங்களில் ஒன்றாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பவர்கள் புகையிலை மற்றும் நிக்கோடினுக்கு அடிமையாகாமல் இருப்பது மிகவும் கடினமான முயற்சியாக இருக்கும். இந்த புகைப்பழக்கத்திற்கு உங்களை இழுத்துச் செல்வது எந்த காரணமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் நீங்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள்.

புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் அந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு நீங்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். நிறைய மது-புகை பழக்க ஒழிப்பு மையங்கள் நிக்கோடின் மாத்திரைகள், இ-சிகரெட்கள், பேட்ச் போன்ற பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை நிறுத்த உதவுகின்றன.

பல்வேறு மூலிகைகள் மற்றும் மூலிகை பொருட்களை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் வழிமுறை ஒன்றும் உள்ளது. முழுவதும் இயற்கையானதாகவும் மற்றும் பக்க விளைவுகள் இல்லாமலும் இருப்பதால், இந்த மூலிகை வைத்திய முறைகள் தற்போது வெகு வேகமாக பிரபலமாகி வருகின்றன.

smoking,thought,cigarette,reliever,mint ,புகைப்பிடித்தல், எண்ணம், சிகரெட், விடுபட வைக்கும், புதினா

செயின்ட் ஜான்ஸ் வோர்ட்: இது புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது உடலை அமைதிப்படுத்தவும், ஓய்வெடுக்க வைக்கவும் செய்து, நிக்கோடினின் பிடியிலிருந்து விடுபட விரும்புபவர்களின், மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் செய்யும்.

லோபெலியா: இந்த மூலிகை நிக்கோடின் செய்யும் செயல்களைப் போன்றே அடிமையாக்காத வகையில் உங்களுடைய மூளையில் செய்யும் தன்மை கொண்டாதாகும். எனவே இது புகைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் விற்கப்படும் புகைப் பழக்கத்தை நிறுத்தும் சில பொருட்களில் இந்த மூலிகையின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

smoking,thought,cigarette,reliever,mint ,புகைப்பிடித்தல், எண்ணம், சிகரெட், விடுபட வைக்கும், புதினா

ப்ளூ வெர்வெய்ன்: ப்ளூ வெர்வெய்ன் மூலிகையானது இயற்கை முறையில் அமைதிப்படுத்தும் காரணியாகச் செயல்பட்டு உங்களுடைய மன அழுத்தம், பயம், பதட்டம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் உதவி செய்து உங்களை சற்றே ஓய்ந்திருக்க செய்யும். இந்த வகையில் நீங்கள் நிக்கோடின் பிடியிலிருந்து வெளிவரும் போது ஏற்படும் தடங்கல்களிலிருந்து உங்களை விடுபட வைத்து, உங்களுக்கு மீண்டும் சிகரெட் பிடிக்கும் எண்ணம் வராமல் தடுக்கும் வைக்கும்.

புதினா: நிக்கோடினில் இருந்து விடுபடும் போது ஏற்படக் கூடிய பக்க விளைவுகளாக குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை உள்ளன. இந்நேரங்களில் பெப்பர்மின்ட் என்கிற புதினா குமட்டலை குறைத்து, ஓய்வெடுக்க தூண்டும் காரணியாக சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு மயக்கமூட்டவும் மற்றும் வலியை-குறைக்கவும் செய்யும் திறன் உள்ளது.

Tags :