Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சளித் தொல்லையை போக்க உதவும் எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

சளித் தொல்லையை போக்க உதவும் எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Sun, 16 Apr 2023 11:27:02 PM

சளித் தொல்லையை போக்க உதவும் எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

சென்னை: சளித் தொல்லையை போக்க உதவும்... மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சளித்தொல்லை பறந்து போய்விடும். மிளகுப் பொடியை ஒரு காட்டன் துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல் எல்லாம் பறந்தே போய்விடும்

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நெஞ்சு சளி போக தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு(காணப்பயறு) சூப் அருமையான மருந்து. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும். தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

cold,cough,basil,honey,onion,daily ,சளி, இருமல், துளசி, தேன், வெங்காயம், நாள்தோறும்

மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது. வெங்காயம் சளியை முறிக்கும். பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் ‘c’ இருக்கிறது. வைட்டமின் ‘c’ ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

Tags :
|
|
|
|
|