Advertisement

தொப்பையை சட்டென குறைக்க உதவும் சில வழிமுறைகள்

By: Nagaraj Sun, 18 Dec 2022 11:10:01 PM

தொப்பையை சட்டென குறைக்க உதவும் சில வழிமுறைகள்

சென்னை: தொப்பை பிரச்சினையை போக்க ஒரு சில சித்த வைத்திய முறைகளும் பெரிதும் உதவுகின்றது. அவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க.

நத்தைச் சூரி விதைப்பொடியை காப்பி போல இருவேளை காய்ச்சி குடிக்கலாம். குங்கிலியப் பற்ப மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிடலாம்.

சிறிதளவு கொள்ளு (கருப்பு, சிவப்பு, வெள்ளை ஏதாவது ஒன்று) எடுத்து அதனுடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் இவை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் வீதம் குடிக்கலாம்.

belly,lemon juice,honey,ginger juice,garlic juice ,தொப்பை, எலுமிச்சம் பழசாறு, தேன், இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு

இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு (பூண்டை சிதைத்து வெண்ணிற துணியில் வைத்து நெருப்பில் வாட்டி எடுத்து பிழிய சாறு வரும்), எலுமிச்சை சாறு, புதினாச்சாறு இவை அனைத்தும் 2.5 மில்லி வீதம் எடுத்து 5 மில்லி தேன் கலந்து காலை, இரவு சாப்பிட கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனைக் குறைக்க உதவும்.

எலுமிச்சம் பழச்சாறு, தேன் இவற்றை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

Tags :
|
|