Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குளிர்காலத்தில் உடல்நிலையை பராமரிக்க சில ஆலோசனைகள்

குளிர்காலத்தில் உடல்நிலையை பராமரிக்க சில ஆலோசனைகள்

By: Nagaraj Mon, 30 Nov 2020 7:36:07 PM

குளிர்காலத்தில் உடல்நிலையை பராமரிக்க சில ஆலோசனைகள்

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இருமல், சளி, தும்மல் போன்றவை அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாகும். தொண்டை புண்ணிலிருந்து நிவாரணம் தரக்கூடிய சில பொதுவான வைத்தியங்கள் உள்ளன.

இருமல் ஆரோக்கியத்திற்கு மோசமானதல்ல, சாதாரண இருமல் இயற்கையான செயலாகும். இருமல் பொதுவாக தற்காலிகமானது, அது விரைவில் சரியாகி விடும். ஒவ்வாமை, தூசி, புகை அல்லது மாசு காரணமாக இருமல் ஏற்படலாம், இது குளிர்காலத்தில் இன்னும் அதிகமாகலாம். நீங்கள் தொண்டை புண்ணால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இருமல் உண்டாகும்.

இந்தப் பிரச்னையை இயற்கை வைத்தியர்களால் குணமாக்கி சுவாசத்தை சீரமைக்க முடியும். இருப்பினும இந்த பிரச்னை நீண்ட காலமாக நீடித்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. இருமல் பிரச்னையை சரிசெய்யும் வீட்டு வைத்தியம் குறித்து நாம் அறிந்திருப்பது அவசியம்.

cough,runny nose,sneeze,winter,avoid ,இருமல், சளி, தும்மல், குளிர்காலம்,  தவிர்க்கவும்

இருமலுக்கும் ஜலதோசத்திற்கும் சிறந்த மருந்தாகும். தேனில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள், ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை புண்ணை ஆற்ற உதவும். இருமலுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஓவர்-தி-கவுண்டர் (ஓடிசி) மருந்துகளை விட தேன் சிறந்தது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூலிகை தேநீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து 2 டீஸ்பூன் தேனைக் கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்கவும். இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கவேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.

தொண்டை வலி வரும்போது உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது வழக்கம். உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால் தொண்டை வலி மட்டும் அல்லாமல் தொண்டை அரிப்பு, சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு தரும்.

உப்பு தண்ணீரில் வாய் கொப்புளிப்பதால் தொண்டை அரிப்பு மற்றும் நுரையீரல், நாசி பாதை ஆகியவற்றில் சளி உருவாக்கத்தைக் குறைக்கும். 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1/4 டீஸ்பூன் உப்பு கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை வாய் கொப்பளிக்கவும். இந்த முறை குழந்தைகளுக்கு சரியாக வராது என்பதால் அவர்களுக்கு கொடுப்பதைத் தவிர்க்கவும்.

Tags :
|
|
|