Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பயணங்களின் போது ஏற்படும் ஒற்றைத் தலைவலியை தவிர்க்க சில வழிகள்

பயணங்களின் போது ஏற்படும் ஒற்றைத் தலைவலியை தவிர்க்க சில வழிகள்

By: Nagaraj Wed, 14 Dec 2022 9:52:45 PM

பயணங்களின் போது ஏற்படும் ஒற்றைத் தலைவலியை தவிர்க்க சில வழிகள்

சென்னை: பயணங்களின் போது திடீரென ஏற்படும் ஒற்றைத் தலைவலியை தவிர்க்க சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயணம் செய்வதற்கு முதல் நாள் இரவு நன்றாக தூங்க வேண்டும். நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றாலும் அது ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும்.

பயணத்தின் போது பெரும்பாலானோர் சிறுநீர் உபாதையை கழிக்க இடம் கிடைக்காது என்ற காரணத்தால், தண்ணீர் குடிப்பதை தவிர்க்கின்றனர். இதனால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். எனவே உடலுக்கு தேவையான நீரை அருந்துங்கள்.

travel,migraine,stress,suggestion,avoidance ,பயணம், ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், பரிந்துரை, தவிர்ப்பு

மது மற்றும் இனிப்புகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளாதீர்கள். ஏனெனில் இவையும் ஒற்றைத் தலைவலியை உருவாக்கும் காரணிகள் தான் என மருத்துவர்கள் கூறுகினறனர்.

ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உங்களுக்கு ஏதேனும் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டாலோ பயணத்தின் போது மறக்காமல் அதனை எடுத்துச் செல்லுங்கள். மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.

Tags :
|
|