Advertisement

பல நோய்களுக்கு மருந்தாகும் செம்பருத்தி பூ!

By: Monisha Tue, 15 Sept 2020 11:19:30 AM

பல நோய்களுக்கு மருந்தாகும் செம்பருத்தி பூ!

செம்பருத்தி பூ பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பொதுவாக கிராமங்களில் எல்லா வீடுகளிலும் இந்த செம்பருத்தி பூ காணப்படும். நம்முடைய முன்னோர்கள் அதனுடைய மருத்துவ குணங்களை அறிந்து வைத்திருந்தனர்.

பல நோய்களுக்கு இந்த செம்பருத்தி பூ மருந்தாக அமைகிறது. சித்தர்கள் செம்பருத்தி பூவை தங்கபஸ்பத்திற்கு இணையாக சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இயற்கை உணவு மருந்து பொருள் இது.

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

hibiscus flower,health,fever,mineral development,medicinal substance ,செம்பருத்தி பூ,ஆரோக்கியம்,காய்ச்சல்,தாது விருத்தி,மருந்து பொருள்

பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று,நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது. இப்பூ தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்.

Tags :
|
|