Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வறட்டு இருமலை சரி செய்ய வீட்டில் உள்ள பொருட்களே போதும்!

வறட்டு இருமலை சரி செய்ய வீட்டில் உள்ள பொருட்களே போதும்!

By: Nagaraj Thu, 12 Nov 2020 09:26:24 AM

வறட்டு இருமலை சரி செய்ய வீட்டில் உள்ள பொருட்களே போதும்!

இருமலை விரட்ட எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள் உங்களுக்காக.

மழைக்காலம் தொடங்கி விட்டது என்றாலே பலருக்கும் சளி, காய்ச்சல், இருமல் என அடுத்தடுத்து உடல்நல குறைபாடு தொடங்கி விடும். இதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது. அதிலும் இது கொரோனா காலம் என்பதால் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது போன்ற சமயங்களில் சளி, காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதிலும் வறட்டு இருமல் வந்தால் சிலர் இது போன்ற சமயங்களில் மருத்துவமனைக்கு போக தயங்குவார்கள். வீட்டு வைத்தியமே போதும் என நினைப்பார்கள். அப்படி சாதாரண வறட்டு இருமல் ஓரிரு நாட்களில் சரியாகி விட்டது என்றால் பிரச்சனை இல்லை.

ஆனால், இது தொடரும் போது கண்டிப்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது என்பது முக்கியமான விஷயம். எனவே, சாதாரண வறட்டு இருமலாக இருந்தால் நம் வீட்டு சமையலறை பொருட்களை கொண்டே எப்படி சரி செய்யலாம் என்பது குறித்தை தெரிந்து கொள்வோம்.

herbal medicine,honey,licorice,garlic,bark powder,cough ,அருமருந்து, தேன், அதிமதுரம், பூண்டு, பட்டை பொடி, இருமல்

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி மற்றும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய ஒரு பொருள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே, வறட்டு இருமலால் பாதிக்கப்படும் போது தினமும் காலை மற்றும் இரவு பாலில் மஞ்சள் சிறிதளவு சேர்த்து குடிக்கலாம். இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதோடு மட்டுமில்லாமல், சளியை நீக்கி இருமலையும் குணப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பால் பொருட்களை உபயோகப்படுத்தாதவர்கள், வெந்நீரில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்தும் குடிக்கலாம். இதுவும் நல்ல பலனை தரும். பாலுடன் மஞ்சள் சேர்க்கும் போது, கூடவே பூண்டும் சேர்க்கலாம். மஞ்சள் போலவே, இருமல் மற்றும் சளிக்கு பூண்டு ஒரு அருமருந்து. பூண்டு நெடியோ அல்லது சுவையோ பிடிக்காதவர்கள் பூண்டிற்கு பதிலாக தாராளமாக இஞ்சியை சேர்க்கலாம்.

இதன் காரத்தனமை, இருமலால் பாதிக்கப்பட்டுள்ள தொண்டைக்கு இதமாக இருப்பதோடு விரைவில் சளி மற்றும் இருமலையும் நீக்கும். எனவே, இருமல் நீங்கும் வரை தினமும் காலை மற்றும் இரவில் பாலில் பூண்டு அல்லது இஞ்சி தட்டி போட்டு மஞ்சள் கலந்து குடிக்கலாம்.

தேனுடன் அதிமதுரம், பட்டை பொடி முதலியவற்றையும் சேர்க்க வேண்டும். தேன், அதிமதுரம் மற்றும் பட்டை இவை இரண்டையும் பொடியாக்கி வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வர வேண்டும். இதன் மூலம் தேவையில்லாமல் வரும் வறட்டு இருமலை தவிர்க்கலாம். மேலும் இது வறட்டு இருமலை சரி செய்யும் அருமருந்து என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Tags :
|
|