Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை சரிசெய்வதற்கான வீட்டு வைத்தியங்கள்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை சரிசெய்வதற்கான வீட்டு வைத்தியங்கள்

By: Karunakaran Mon, 09 Nov 2020 2:10:57 PM

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை சரிசெய்வதற்கான வீட்டு வைத்தியங்கள்

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் ஒரு குறிப்பிடத் தகுந்த பிரச்சனையாகக் கருதப்படுவது கர்ப்பிணிப் பெண்களின் கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அடைதல் ஆகும். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும்.

கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக நிற்கும் பொழுது இரத்த ஓட்டம் சரியானபடி இருக்காது. அதனால் கால் வீக்கம் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் நெடுநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு நாளில் மூன்று நான்கு வேளைகளில் 15 நிமிடம் என்ற நேர அளவில் கால்களைத் தலையணைக்கு மேலே உயர்த்தி வைக்கலாம். இது ஒரு எளிமையான மற்றும் சிறந்த வழி. சற்று மென்மையான ரகம் கொண்ட காலணிகளை அணிவது சிறந்தது.

home remedies,foot swelling,pregnant women,pregnancy ,வீட்டு வைத்தியம், கால் வீக்கம், கர்ப்பிணி பெண்கள், கர்ப்பம்

நீச்சல் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி. நீச்சல் அடிப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். கர்ப்பிணிப் பெண்கள் போதிய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்வது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் உப்பின் அளவை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து பொட்டாசிய த்தை போதிய அளவிற்கு உடலில் கிடைக்கச் செய்வதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்யலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் நேராகப் படுப்பது அல்லது வலது பக்கமாகப் படுப்பதை விட இடது பக்கமாகப் படுப்பது சிறந்தது. கர்ப்பிணிப் பெண்கள் தினம் மாலை நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. துரித உணவு களையும் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும். இதில் அதிக அளவு எண்ணெய் மற்றும் உப்பும் சேர்த்து இருப்பார்கள். இது கால் வீக்கத்தை அதிகரிக்க செய்து விடும். ஆக இது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Tags :