Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பித்தத்தை சத்தமின்றி போக்க உதவும் வீட்டு வைத்தியம்

பித்தத்தை சத்தமின்றி போக்க உதவும் வீட்டு வைத்தியம்

By: Nagaraj Sun, 26 June 2022 11:40:07 PM

பித்தத்தை சத்தமின்றி போக்க உதவும் வீட்டு வைத்தியம்

சென்னை: பித்தம் தீர சித்த மருத்துவம்... உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் உடலில் ஒருவித எரிச்சலை உணர்வீர்கள். சிலருக்கு உடலில் ஏதாவது ஒரு இடத்தில் திடீரென்று எரியும் உணர்வு உண்டாகும். சிலருக்கு கால்கள், உள்ளங்கைகளில் எரிச்சல் உணர்வு இருக்கும்.சிலர் மன அமைதியின்றி சத்தம் போடுவார்கள் .

தாகமும் பசியும் பித்த தோஷத்துடன் தொடர்பு கொண்டது என்பதால் இதை தொடர்ந்து செரிமான பிரச்சனைகளும் சந்தித்தால் அது பித்த தோஷத்தின் அறிகுறிகள் ஆகும். இது இருக்கும் போது பசியையும் தாகத்தையும் உணர்ந்துகொண்டே இருப்பீர்கள்.

பித்தம் ஏற்றம் இறக்கம் இருக்கும் போது உண்டாகும் அறிகுறியில் தூக்கமின்மை ஒன்றாகும். அடிக்கடி காய்ச்சல் வெப்பநிலை அதிகரிப்பு எதிர்கொண்டால் அது பித்த தோஷத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

bile,cure,cinnamon,anger,water,lemon juice ,பித்தம், தீரும், கொய்யாப்பழம், கோபம், தண்ணீர், லெமன் ஜூஸ்

பித்த தோஷத்தில் ஏற்ற இறக்கம் இருந்தால் அது கடினமான வெப்பத்தை உடலில் உண்டாக்கும். பித்த ஏற்றத்தாழ்வு இருப்பவர்கள் நீண்ட நேரம் வெப்பத்தை தாங்கி இருக்க முடியாது. வெந்நீர் குடிப்பதை எப்போதும் விரும்பமாட்டீர்கள். உடலில் பித்ததோஷம் அதிகமாக இருந்தால் வெளிப்படும் வியர்வை ஒருவித துர்நாற்றத்தை வெளியிடக்கூடும்.

கொய்யாபழம் நமது உடலுக்கு மிகச் சிறந்த பழமாகும். நமது உடலில் ஏற்படும் பாதிப்புகள் ஆற்றுவதற்கு பயன்படுகிறது. இது காலரா, சளி மற்றும் மூச்சுப் பிரச்சினை போக்க பயன்படுகிறது. இது சரும பிரச்சினைகள், தொற்றுகள், பற்சொத்தை, வயிறு உப்புசம், பித்தநீர் பிரச்சினை, ஸ்கார்லெட் காய்ச்சல், காயங்கள், யோனி இரத்த போக்கு, லேசான காய்ச்சல், நீர்ச்சத்துயின்மை போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

லெமன் ஜூஸ் பித்தப்பையில் உள்ள பித்த கற்களை போக்க பயன்படுகிறது. மேலும் பித்தபையில் ஏற்பட்டுள்ள அடைப்பை போக்குகிறது. 1/4 கப் லெமன் ஜூஸ் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் கலக்காமல் குடித்து வர வேண்டும்.

Tags :
|
|
|
|