Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாம் தேன் பூண்டு

ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாம் தேன் பூண்டு

By: Nagaraj Sat, 05 Nov 2022 11:54:01 PM

ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாம் தேன் பூண்டு

சென்னை: உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது தேன்பூண்டு. தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறுமுறை இதை அரை ஸ்பூன் அளவு சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம். உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை எரிக்க உதவும். பூண்டில் அலிசின் என்ற ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

food,gastric,honey,garlic,helps,work ,உணவு, இரைப்பை, தேன் பூண்டு, உதவுகிறது, பணி

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் அவை அலர்ஜியால் ஏற்படும் ஒவ்வாமைகளை தடுத்திடும். அலர்ஜியால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளைக் கூட பூண்டு எளிதாக தீர்க்கிறது.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது.

Tags :
|
|
|
|