Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பல்வேறு நோய்களை போக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன்

பல்வேறு நோய்களை போக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன்

By: Nagaraj Fri, 29 July 2022 11:25:04 PM

பல்வேறு நோய்களை போக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன்

சென்னை: வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கண் பார்வை நன்கு தெரியும். இளம் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேனை சேர்த்து அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

தினமும் ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

health,body weight,honey,pomegranate juice,hot water ,ஆரோக்கியம், உடல் எடை, தேன், மாதுளம் பழச்சாறு, வெந்நீர்

தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். தினமும் காலையில் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கவேண்டும். இவை மூன்றுமே வயிற்றை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.


உடல் பருமனாக இருப்பவர்கள், தேனுடன் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் உடல் எடையை குறைத்து விடலாம். காலை உணவிற்குப் பின் தினமும், மாதுளம் பழச்சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியம் உண்டாகும். புது ரத்தமும் உற்பத்தியாகும்.

Tags :
|
|