Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இஞ்சி மூலம் நாம் எப்படி ஆரோக்கியம் பற்றி தெரிந்துகொள்வோமா

இஞ்சி மூலம் நாம் எப்படி ஆரோக்கியம் பற்றி தெரிந்துகொள்வோமா

By: vaithegi Wed, 15 Nov 2023 11:12:05 AM

இஞ்சி மூலம் நாம் எப்படி ஆரோக்கியம் பற்றி தெரிந்துகொள்வோமா

இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும். ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சியினால் ஆண்களுக்கு கிடைக்கும் பயன்கள் : இஞ்சியை உட்கொள்வதன் மூலம், ஆண்களின் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். இதன் பயன்பாடு ஆண்களுக்கு ஏற்படும் பாலுறவு குறைபாட்டின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் உடலின் நோய்களை எளிதில் குணப்படுத்துகிறது. இஞ்சியை உட்கொள்வது ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை அதிகரிக்கிறது.

இஞ்சியினால் பெண்களுக்கு கிடைக்கும் பயன்கள் : இஞ்சியில் சுமார் 40 ஆக்ஸிஜனேற்ற சேர்மங்கள் உள்ளன. இது முழு உடலிலும் ஆரோக்கியமான அழற்சி எதிர்வினைக்கு உதவுகின்றன. செரிமான ஆதரவு, மாதவிடாய் நிவாரணம், நோயெதிர்ப்பு ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் பிரசவ உழைப்புக்கு பிறகு தசை நிவாரணம் போன்றவற்றுக்கு இவை பெரிதும் உதவுகிறது.

health,ginger ,ஆரோக்கியம் ,இஞ்சி

1.இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

2.பொதுவாக , ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதை இஞ்சி சரிசெய்யும்.

3.மேலும் இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுக்கும்.

4.இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.

5.இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும்.

6.அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.

7.இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து கொள்வோம்

8.அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும்

9.இந்த இஞ்சி தேன் மூலம் பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும்.

10.இஞ்சி தேன் மூலம் ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்

Tags :
|