Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன

இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன

By: vaithegi Thu, 16 Mar 2023 3:29:29 PM

இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன

இந்தியாவில் பல மாநிலங்களில் மர்ம காய்ச்சல் ஒன்று அதிகமாக பரவி கொண்டு வருகிறது. கொரோனாவில் இருந்து தற்போது தான் மக்கள் மீண்டு வரும் இந்த சமயத்தில் இது போல வைரஸ் பாதிப்புகள் மக்களை அச்சுறுத்தி கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பருவக் காலங்களில் வரும் இன்ஃப்ளூயன்ஸா H3N2 வகை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என சுகாதாரத்துறை விளக்கம் கொடுத்துள்ளது. அதன் படி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இருமல் அல்லது தும்மல் வந்தால் அதில் உள்ள நீர்த்துளிகள் காற்றில் ஒரு மீட்டர் வரை பரவும் அதனால் அந்த இடத்தில் இருக்கும் மற்றொருவருக்கு இப்பாதிப்பு ஏற்படுகிறது.

symptoms,influenza ,அறிகுறிகள் ,இன்ஃப்ளூயன்ஸா

அதே போன்று காற்று மாசுபாடும் இந்த வைரஸ் அதிகம் பரவ காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குமட்டல், இருமல், வாந்தி, உடல்வலி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த வைரஸ் பாதித்தற்கான அறிகுறிகளாகும். இந்த வைரஸ் சாதாரண வைரஸ் தான் என்றாலும், ஏற்கனவே ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச கோளாறு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளுக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வரக்கூடும் எனவும், குழந்தைகள் உடல் மற்றும் முகம் நீல நிறமாக மாறும் எனவும், மார்பு, தசை வலி மற்றும் நீர்ப்போக்கு போன்றவை ஏற்படலாம் எயாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :