Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • எவ்வளவு வைட்டமின்கள்... காடை முட்டை சாப்பிடுங்க: ஆரோக்கியமாக இருங்க!!!

எவ்வளவு வைட்டமின்கள்... காடை முட்டை சாப்பிடுங்க: ஆரோக்கியமாக இருங்க!!!

By: Nagaraj Sat, 12 Nov 2022 9:23:31 PM

எவ்வளவு வைட்டமின்கள்... காடை முட்டை சாப்பிடுங்க: ஆரோக்கியமாக இருங்க!!!

சென்னை: கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இவ்வளவு சத்துக்கள் கொண்ட காடை முட்டையை சாப்பிடும் பொழுது அதில் கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்க்கலாம்.


இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், சிங்க், தயாமின், விட்டமின் பி6, வைட்டமின் பி12, விட்டமின் ஏ, கால்சியம், விட்டமின் ஈ.

இது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது. காடை முட்டையில் அடங்கியிருக்கும் விட்டமின் டி, உணவில், கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதன் மூலமாக கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும்.

அலர்ஜியைப் போக்கும்: உடலில் உண்டாகக்கூடிய அலர்ஜி காரணமாக மூக்கிலிருந்து நீர் வடிவது, தும்மல் மற்றும் உடல் சிவந்து காணப்படுவது இது போன்ற அலர்ஜி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த காடை முட்டையை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கக்கூடிய ஒரு வகையான புரதம் அலர்ஜியை எதிர்த்து அவை உண்டாகுவதை தடுக்கிறது.

illness,immunity,quail eggs,blood level,anemia ,நோய், எதிர்ப்பு சக்தி, காடை முட்டை, ரத்த அளவு, ரத்தம் குறைவு

ரத்தசோகையை குணமாக்கும்: உடலில் புதிய ரத்த உற்பத்திக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் இந்த காடை முட்டையில் அடங்கியிருக்கும். உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த முட்டையை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த அளவு சீராக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: தினமும் காடை முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலிமை அடையும். இதன் மூலமாக தொற்று நோய்கள் உண்டாகக் கூடிய பல்வேறு பிரச்சனைகள் தடுக்கப்படும். அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் இதுபோன்ற பிரச்சனைகளால் அவதிபடுபவர்கள் காடை முட்டையை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

Tags :