Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் ?

இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் ?

By: Karunakaran Fri, 30 Oct 2020 1:00:58 PM

இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் ?

எல்லா தாய்மார்களுக்கும்நாம் ஏதாவது தவறு செய்தால் குழந்தையை பெரிதாக பாதிக்குமோ என்ற பயம் ஏற்படும். எனவே தாய்மார்கள் பயத்தை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரையை கேட்பது நல்லது. தாய்மார்கள் செய்யும் இயல்பான தவறுகளை பற்றி தெரிந்துகொண்டால், அதை நீங்கள் செய்யாமல் தவிர்க்கலாம். குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவேண்டும். அப்படி மாற்றாமல் இருந்தால் ஈரம் பரவி குழந்தைகள் அழத்தொடங்கும்.

பொதுவாக குழந்தையை டயப்பருக்கு பழக்கப்படுவதைவிட துணிக்கு பழக்கப்படுத்துவது நல்லது. டயப்பரில் இருக்கும் வேதிப்பொருட்கள் குழந்தையின் சருமத்தை பாதிக்கலாம். குழந்தையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை குளிக்க வைத்தால் போதுமானது. அடிக்கடி குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது. தினமும் குளிக்க வைத்தால் குழந்தையின் சருமம் வறண்டு விடும்.

young mothers,care,newborn baby,umbilical cord ,இளம் தாய்மார்கள், கவனிப்பு, புதிதாகப் பிறந்த குழந்தை, தொப்புள் கொடி

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை தொடுவது தாய்மார்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். பஞ்சு அல்லது சுத்தமான துணியை வைத்து தொப்புள் கொடியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் டயப்பரை வைத்தோ வேறு துணியை வைத்தோ தொப்புள் கொடியை மூடக்கூடாது.

வெளிக்காற்று படவே குழந்தையின் தொப்புள் கொடியை விட்டு விட வேண்டும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்துவிடும். ஒருவேளை தொப்புள் கொடியின் சருமம் சிவப்பாகவும், வீங்கியும் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும். இதுபற்றி பெரிதாக பயப்பட வேண்டியதில்லை. இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்.


Tags :
|