Advertisement

வாய்ப்புண் ஏற்பட்டால் அதை குணமாக்குவது எப்படி!

By: Nagaraj Sun, 31 July 2022 2:47:00 PM

வாய்ப்புண் ஏற்பட்டால் அதை குணமாக்குவது எப்படி!

சென்னை: வாய்ப்புண் ஏற்பட்டால் தண்ணீர் விழுங்க முடியாமல், சாப்பிட முடியாமல் பெரும் அவதிப்பட நேரிடும். வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது. அதை எளிதாக குணமாக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கன்னக்கதுப்புகளிலும், உதட்டு ஓரங்களிலும், நாக்கிலும், சிறு கொப்புளங்கள், சிவந்து போதல், வெடிப்பு, இரத்தக்கசிவு ஆகியவை வாய்ப்புண் இருப்பதற்கான அறிகுறிகள். எந்த உணவை சாப்பிட்டாலும் காரமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதிக இனிப்பையும், புளிப்பு சுவையையும் கூட சுவைக்க முடியாது.

சிலருக்கு பற்களின் அமைப்பு இயற்கையிலேயே மிகவும் கூர்மையாக இருக்கும் அல்லது ஏதேனும் விபத்துகளால் பற்கள் வடிவம் மாறிவிடும். அவர்களுடைய கூர்மையான பற்கள் வாயில் நாக்கில் உராய்ந்து காயங்களை ஏற்படுத்தி புண்ணை ஏற்படுத்தும். சில சமயம் வேறு ஏதாவது உடல் உபாதைகளுக்காக எடுத்துக் கொள்ளும் வீரியமான மருந்துகள் வாய்ப்புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் உருவாக்கி விடும். நீண்ட நாள் புகைப்பழக்கம், மது, பான், குட்கா, வெற்றிலை போன்ற பழக்கங்கள், வாய்ப்புண்ணுக்கு முக்கியமான மற்றொரு காரணமாகும்.

sweet,sour taste,eruption,haemorrhage,small blisters,food ,இனிப்பு, புளிப்பு சுவை, வெடிப்பு, இரத்தக்கசிவு, சிறு கொப்புளங்கள், உணவு

அதேபோல், மலச்சிக்கல், பித்த அஜீரணம், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, வைட்டமின் சத்து போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, உணவு ஒவ்வாமை போன்றவையும் மவுத் அல்சருக்கு காரணமாக அமைகின்றன. மனஅழுத்தம், ஆக்ரோஷ குணமுடையவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புண்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

வயிற்றில் புண்கள் இருந்தாலும், அதன் பாதிப்பு வாய்ப் புண்களின் மூலமாகவே வெளிப்படும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வாயில் புண்கள் ஏற்படுவதற்கான காரணமாகும். நமது அன்றாட உணவுப் பழக்க வழக்கங்களிலேயே இதை குணமாக்குவதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. வாய்ப்புண் இருக்கும்போது, பச்சைமிளகாய், புளிப்புச் சுவையுடைய உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவைகொண்ட உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அரை மூடித் தேங்காயை அரைத்து, அதிலிருந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது சிறிதாக, தேங்காய் பாலை புண் உள்ள இடத்தில் படும் படியாக குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசினால் ஒரே நாளில் நல்ல பலன் தெரியும்.

Tags :
|