Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி ?

குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி ?

By: Karunakaran Fri, 18 Sept 2020 3:07:12 PM

குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி ?

குழந்தைகளிடம் மொபைல் போனை கொடுத்து விட்டு தங்கள் வேலைகளை செய்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். இது முற்றிலும் தவறானது. முந்தைய காலங்களில், குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் நேரமும் தூங்க வைக்கும் நேரமும் கதைகளை சொல்லி தருவார்கள். இன்றைக்கு அப்படி நடப்பதே இல்லை. படுக்கச் செல்லும் நேரத்தில் குழந்தைகளிடம் கதைகள் சொல்லும் போது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் நல்ல பிணைப்பு உருவாகும் என உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் பெருகுவதுடன் அதிகமாக சிந்திப்பதற்கும் தூண்டுகிறது. அவர்கள் வளர்ந்தபின் அறிவாளியாகவும், நுண்நோக்கிப் பார்க்குத் திறன் உடையவர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும் இருப்பார்கள். கதைகள் வழியே அவர்கள் கற்றல் திறன் அதிகரிப்பதுடன் வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் ஏற்படும். ஒரு பெற்றோராக, அன்றைய தினம் முழுவதும் நடந்த விஷயங்களை குழந்தையிடம் முதலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

children,night time storie,interesting,parents ,குழந்தைகள், இரவு நேர ஸ்டோரி, சுவாரஸ்யமான, பெற்றோர்

கதை சொல்லும்போது அவர்கள் என்ன மாதிரியான கதைகளைக் கேட்க விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். பின்னர் அவர்கள் விரும்பும் கதைகளை அழகாக வர்ணித்து சொல்லுங்கள். இது உங்கள் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள உதவும். மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு புதிய அனுபவத்தை தர கூடியதாக மாறும். முதலில் நீங்கள் சொல்ல போகும் கதையின் கதாபாத்திரமாக மாற வேண்டும். அப்போது உங்கள் குழந்தை உங்கள் கதைகளை ரசிக்க ஆரம்பிக்கும்.

உங்கள் குழந்தையுடன் வலுவான உறவை ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களுடன் இணக்கமாக இருந்து உங்களையே குழந்தை போல மாற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் நம்பக் கூடிய ஒரு நண்பரைப் போல நடந்து கொள்ளுங்கள். கதை முடிந்தவுடன் நீங்கள் சொன்ன கதையைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். அதிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டவை என்னவென்று கேளுங்கள். மேலும் கதையைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடுங்கள். அப்படி இருந்தால் மட்டுமே அக்கதைகளின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும். அப்போது தான் உங்கள் குழந்தைகள் நேர்மை, பணிவு, தயவு போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள உதவும்.

Tags :