Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோயையும் எதிர்க்கணும்... உடல் நலத்துடனும் வாழணும்... என்ன செய்யணும்!

நோயையும் எதிர்க்கணும்... உடல் நலத்துடனும் வாழணும்... என்ன செய்யணும்!

By: Nagaraj Sun, 18 Sept 2022 10:18:57 AM

நோயையும் எதிர்க்கணும்... உடல் நலத்துடனும் வாழணும்... என்ன செய்யணும்!

சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் வேகமான கால ஓட்டத்தால் நாம் உண்ணும் உணவுகளில் எந்த ஒரு சத்துக்களும் இல்லாததே பல நோய்களும் நம் உடலை ஆக்கிரமிக்க முக்கிய காரணம் ஆகிறது.

இந்த உலகில் அனைவருக்குமே எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வாறு இருப்பது தான் மிகவும் கடினமானது. இருப்பினும் நமது முன்னோர்கள் நீண்ட நாட்கள் நன்கு இளமையுடனேயே காட்சியளித்தனர்.

இதற்கு அன்றைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் காரணம். தற்போதைய காலக்கட்டத்தில், அத்தகைய இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் தக்கவைத்து இருக்க முடியவில்லை.


இவை அனைத்திற்கும் காரணம் நாம் உண்ணும் உணவுகளில் எந்த ஒரு சத்துக்களும் இல்லாததே ஆகும். மேலும் அவ்வாறு இளமையை தக்க வைக்க பல அழகுப் பொருட்களையும் பயன்படுத்துகிறோம். உண்மையில் அவ்வாறு அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி இளமையைத் தக்க வைக்க நினைத்தால், சருமத்தில் சுருக்கங்கள் தான் அதிகரிக்கும்.

cashews,almonds,walnuts,walnuts,strawberries,meal ,முந்திரி, பாதாம், வால்நட், இளமை, ஸ்ட்ராபெர்ரி, சாப்பாடு

எப்போதும் இளமையோடு காணப்படுவதற்கு என்னென்ன உணவுப் பொருட்களை உண்ண வேண்டும் என்பதை பார்ப்போம். இந்த உணவு வகைகளால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நட்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் சத்துக்கள் குவிந்துள்ளன. அதிலும் வைட்டமின்கள் மற்றும் மோனோ-அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளன. ஆகவே இவற்றை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள பழுதடைந்த செல்கள் புதுபிக்கப்படும்.

மேலும் இது உடலில் உள்ள சருமத்தில் வறட்சியை உண்டாக்காமல், எப்போதும் ஈரப்பதத்துடனேயே வைத்து, சருமத்தை இளமையோடு வெளிப்படுத்தும். அதிலும் முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

பெர்ரிப் பழங்களில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடும் போது சருமம் நன்கு அழகாக பொலிவோடு காணப்படுகின்றன.

இதனை போதுமான அளவில் சாப்பிடுவதால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, சருமத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி தங்க வைக்கின்றன. ஆகவே இளமையை தக்க வைக்க ஆப்பிள், ஆப்ரிக்காட், ப்ளூபெர்ரிஸ், ஸ்ட்ராபெர்ரி, பச்சை மற்றும் கருப்பு திராட்சை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

Tags :