Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து சாப்பிட்டால் ஆரோக்கியம் உயரும்

என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து சாப்பிட்டால் ஆரோக்கியம் உயரும்

By: Nagaraj Sat, 13 Aug 2022 10:07:11 PM

என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து சாப்பிட்டால் ஆரோக்கியம் உயரும்

புதுடெல்லி: ஆரோக்கியமான வாழ வேண்டும்... எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட என்ன சாப்பிடுகிறோம் என்பதை சரியாக தெரிந்து உணவு உண்பதுதான், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ உதவும்.

ஆரோக்கியம் என்பது நோய் இல்லாத வாழ்வு என்றே பலர் நினைக்கின்றனர். நோயால் பாதிக்கப்படவில்லை என்றால் மட்டுமே நீண்ட நாட்கள் வாழ முடியுமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். சத்தான உணவுகள், உடற்பயிற்சி ஆகியவை நீண்ட ஆயுளுடன் தொடர்புடையவை. உண்மையில் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்று கவலைப்பட வேண்டியதில்லை.

மாறாக நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பற்றியே கவலைப்பட வேண்டும். கட்டுப்பாடான உணவு மற்றும் விலையுயர்ந்த சப்ளிமெண்ட்ஸ் ஆயுட்காலத்தை மேம்படுத்தாது என்பதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் தொடர்பாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

நீண்ட ஆயுளுடன் வாழ இந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவுப் பொருட்களை தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை உடல் மற்றும் உறுப்புகளின் சிறந்த செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

புதிய இரத்த நாளங்களை உருவாக்கும் உடலின் திறன், காயங்களை குணப்படுத்துவதற்கும், இருதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இரத்த விநியோகத்தை மீட்டெடுப்பதற்கும் முக்கியமானது. ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க, புதிய இரத்த நாளங்கள் உருவாவது அவசியம். நாம் உயிருடன் இருக்கும் வரை உடல் சீராக இயங்குவதை உறுதி செய்ய சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து அவசியம். இதன் மூலம் நீண்ட ஆயுளை அதிகரிக்கலாம்.

foods,dark chocolate,black tea,research,health ,உணவுகள், டார்க் சாக்லேட், பிளாக் டீ, ஆராய்ச்சி, ஆரோக்கியம்

சோயா, கருப்பு ராஸ்பெர்ரி, தக்காளி, தேநீர், மாதுளை, அதிமதுரம், பீர் மற்றும் சீஸ் போன்றவை புற்றுநோயைத் தடுக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும் மிகவும் பயனுள்ள உணவுகள் ஆகும்.

ஆசிய மக்களின் உணவில் சோயா, காய்கறிகள் மற்றும் தேநீர் போன்றவை அதிகமாக இருப்பதாலேயே அவர்களுக்கு மார்பக மற்றும் பிற புற்றுநோய்கள் உருவாகும் அபாயம் கணிசமாகக் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலின் ஸ்டெம் செல்களின் முக்கிய வேலை திசுக்களை சரிசெய்தல், மீளுருவாக்கம் செய்தல் மற்றும் பராமரிப்பதாகும்.


அவை உறுப்புகள், எலும்பு மஜ்ஜை, கல்லீரல், நுரையீரல் மற்றும் குடல் ஆகியவற்றில் வாழ்கின்றன. நாம் உண்ணும் உணவுகளால் அவற்றின் செயல்திறன் பாதிக்கப்படலாம். மிகவும் சக்திவாய்ந்த உணவுகளில் ஒன்றாகும்.

மீன் எண்ணெய் நிறைந்த உணவு, ஆக்ஸிஜன் இல்லாத தசைகளில் சிறந்த சுழற்சியுடன் இணைக்கப்பட்ட ஸ்டெம் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிரூபிக்கிறது.
ஃபிளாவனாய்டு நிறைந்த டார்க் சாக்லேட், பிளாக் டீ, பீர், மாம்பழம் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை மீளுருவாக்கம் தூண்டும் உணவுகள் ஆகும்.

Tags :
|