Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டவர்களா நீங்கள்... சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டவர்களா நீங்கள்... சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

By: Nagaraj Mon, 08 June 2020 07:39:01 AM

ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டவர்களா நீங்கள்... சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் சிறுதானியங்களை ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.

திணை: திணையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும். கண்ணுக்கு ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. திணைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும். விரைவில் செரிமானமாகும்.

சாமை: நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது. இதில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.

small grains,health,cereal,rye,vargarisi,cashew ,சிறு தானியங்கள், ஆரோக்கியம், திணை, கம்பு, வரகரிசி, கேழ்வரகு

குதிரைவாலி: குதிரைவாலி சுவைமிகுந்தது. இவை அல்சர் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். காய்ச்சல் நேரத்தில் கஞ்சி வைத்து குடித்தால் காய்ச்சலை குணப்படுத்தும். மேலும் வாய்வு பிரச்சனைகளை குணப்படுத்தும். குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட, இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சனை சரியாகும்.

வரகு: அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம். பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும். தேள் கடிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது வரகு.

small grains,health,cereal,rye,vargarisi,cashew ,சிறு தானியங்கள், ஆரோக்கியம், திணை, கம்பு, வரகரிசி, கேழ்வரகு

கேழ்வரகு: கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம். கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வாகிறது.

கம்பு: கம்புவில் புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல் நோய் பிரச்சனை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.

Tags :
|
|
|