Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் எடையால் அவதிப்படுகிறீர்களா ...அதற்கு இதை பயன்படுத்திப்பாருங்கள் !

உடல் எடையால் அவதிப்படுகிறீர்களா ...அதற்கு இதை பயன்படுத்திப்பாருங்கள் !

By: vaithegi Wed, 24 Aug 2022 9:50:00 PM

உடல் எடையால் அவதிப்படுகிறீர்களா ...அதற்கு இதை பயன்படுத்திப்பாருங்கள் !

வீட்டு மருத்துவ அறை என்பது சமையறை தான். முன்னோர்கள் காலத்தில் உணவு பொருள்களிலிலும் வாச னைக்கும் சேர்க்கப்படும் பல பொருள்களும் மருத்துவ குணங்களைக் கொண்டிருந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று வெந்தயம்.வெந்தயம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கின்றன.வெந்தயம் மசாலாக்களிலும் தாளிப்பிலும் மட்டுமல்ல வெறுமனே கூட எடுத்துகொள்ள வேண்டிய உணவு என்கிறார்கள் அன்றைய முன்னோர்களும் இன்றைய மருத்துவர்களும்.


மேலும் வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது.நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்றுவலி, வீக்கம், முதுகுவலி, முழங்கால் மூட்டு வலி முதல் தசைப்பிடிப்பு வரை உடலின் எந்தப் பகுதியிலும் வலி போன்ற வாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தய விதைகள் பயனுள்ளதாக இருக்கின்றன.வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கின்றன.வெந்தயம் அடிக்கடி உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுத்து, பிற்காலத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

body weight,dill ,உடல் எடை,வெந்தயம்

அது மட்டும் இல்லாமல் வெந்தய விதைகள் கார்போஹைட்ரேட்டின் செரிமானத்தை மெதுவாக்கும். இது, இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மார்பு நெரிசல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன.உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் வெந்தய விதை நீரை குடிக்கலாம். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த நீரை விதைகளுடன் காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் உட்கொள்ளவும்.



அதே சமயம் புரதம் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், நியாசின், இரும்புசத்து, நீர்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு, சோடியம், தயாமின், ரிபோப்ளேவின், நிகோடினிக் போன்றவையும் நிறைந்திருக்கின்றன. மேலும் இதில் டையோஸ் ஜெனின் என்னும் சேர்மமும் இணைந்திருப்பதால், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஸ்டீராய்டல் சப்போனின் போன்றவற்றையும் தன்னுள் கொண்டிருக்கிறது. வெந்தயம் அழகும் ஆரோக்யமும் இரண்டும் தருகின்றன.எனவே இந்த அருமையான மருத்துவம் நிறைந்த வெந்தயம் சாப்பிட்டு நலன் பெறுக.




Tags :