Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்

பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்

By: Nagaraj Mon, 17 Apr 2023 10:56:55 PM

பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்

சென்னை: பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. மிகவும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
கல்லீரல் வீக்கத்திற்கு பப்பாளி மிகவும் சிறந்த மருந்தாக உள்ளது. தினமும் காலை மாலை என இருவேளையும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகிவிடும்.

வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பப்பாளி பழம் மிகவும் சிறந்து விளங்குகிறது. மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, மூலநோயால் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகிவிடும்.

பப்பாளியை நாம் எந்தக் காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். பொதுவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.

health,papaya,liver inflammation,diabetes,menstrual problems ,,ஆரோக்கியம்,பப்பாளி பழம்,கல்லீரல் வீக்கம்,நீரிழிவு பிரச்சனை,மாதவிடாய் பிரச்சனை

பப்பாளிபழம் சர்க்கரை, நீரிழிவு பிரச்சனையை குணமாக்குவதில் சிறப்பாக செயல் படக்கூடியது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, அவர்களின் உடல் சோர்வை குறைகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வலிகள், உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் பப்பாளி இந்த பிரச்னையை குணப்படுத்துகிறது.

Tags :
|
|