Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • எடையை அதிகரிக்க விரும்பினால்... தயிரை இப்படி சாப்பிடுங்கள்!!

எடையை அதிகரிக்க விரும்பினால்... தயிரை இப்படி சாப்பிடுங்கள்!!

By: Monisha Thu, 19 Nov 2020 1:55:28 PM

எடையை அதிகரிக்க விரும்பினால்... தயிரை இப்படி சாப்பிடுங்கள்!!

நாம் விரும்பி சாப்பிடும் தயிரரில் பலவிதமான சத்துக்களை அடங்கியுள்ளது. கால்சியம், புரோட்டீன், வைட்டமின் என பல்வேறு சத்துக்களைக் கொண்டது தயிர். பாலை விட தயிர் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்.

உடல் மெலிந்தவர்கள், எடையை அதிகரிக்க விரும்பினால், தினசரி ஒரு கிண்ணம் தயிரில் சர்க்கரை மற்றும் உலர் பழங்களை கலந்து சாப்பிடவேண்டும். இது எடையை அதிகரிப்பதுடன், சோர்வு மற்றும் பலவீனத்தை சமாளிக்க உதவும்.

ஒரு கிண்ணம் தயிரில் 1/2 தேக்கரண்டி சோம்பை கலந்து சாப்பிடுங்கள். இதை கடைபிடித்தால் போதும், ஆழ்ந்த தூக்கமும் வரும், அதோடு கூடுதல் நன்மையாக வாயு பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

calcium,protein,vitamins,yogurt,health ,கால்சியம், புரோட்டீன், வைட்டமின்,தயிர்,ஆரோக்கியம்

செரிமான பிரச்சினைகள் இருப்பவர்கள், ஒரு கிண்ணம் தயிரில் கருப்பு உப்பு மற்றும் 2-3 சிட்டிகை வறுத்த சீரகத்தை கலந்து சாப்பிட வேண்டும். இந்த கலவையானது பசியை அதிகரிக்கவும், செரிமானத்தை வலுப்படுத்தவும் உதவும்.

வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், தயிரில், வாழைப்பழத்தைக் கலந்து சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். அதோடு, ரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும்.

Tags :
|