Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தோசைமாவு புளித்து போய் விட்டதா? அப்போ இப்படி பண்ணிப்பாருங்க!

தோசைமாவு புளித்து போய் விட்டதா? அப்போ இப்படி பண்ணிப்பாருங்க!

By: Monisha Tue, 22 Sept 2020 11:44:45 AM

தோசைமாவு புளித்து போய் விட்டதா? அப்போ இப்படி பண்ணிப்பாருங்க!

வீட்டில் ருசியாக சமையல் செய்யும் பெண்களுக்கு கிச்சனில் ஏற்படும் சில பிரச்சனைகளை சரி செய்ய தெரியாது. அந்தவகையில் நாம் தெரிந்திருக்க வேண்டிய சில டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம்

* குளிமையான தண்ணீரில் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு எடுத்து வைத்தால் அப்போது பறித்த காய்கறிகளை போல ப்ரெஷ்ஷாக இருக்கும்.

* நாம் எவ்வளவு தான் சர்க்கரையை பத்திரமாக வைத்தாலும் அதில் எறும்பு வரும். ஆனால் அதில் சிறிதளவு கிராம்பு போட்டு வைத்தால் எறும்பு வராது, மற்றும் எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் தண்ணீர் ஊறாது.

* சிலவேளைகளில் இரண்டு நாளுக்கு மேல் தோசைமாவு வைத்திருந்தால் புளித்து போகும். அப்படி புளித்து போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் கழித்து பார்கும் போது தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை செய்தால் புளிப்பே தெரியாது.

* வெங்காயத்தை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கும்.

* இட்லி வேக வைத்த பிறகு கெட்டியாக இருந்தால் அடுத்து இட்லி ஊற்றும் போது 5 பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் அரைத்து இட்லி மாவில் கலந்து இட்லி செய்தால் பூ போல இட்லி வரும்.

kitchen,vegetables,sugar,onions,snacks ,கிச்சன்,காய்கறி,சர்க்கரை,வெங்காயம்,தின்பண்டங்கள்

* வாழையின் பூ, தண்டு, காய் என அனைத்தும் பயனுள்ளது. இவைகளை சமைக்கும்போது சிறிதளவுதேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், நல்ல மணமாக இருக்கும்.

* குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொதுவாக நிறைய தின்பண்டங்கள் இருக்கும். அப்போ அதிக அளவில் மிச்சர் இருந்தால் சிறிதளவு சர்க்கரை தூவி வைத்துக்கொள்ளுங்கள். மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும்.

* இரண்டு டம்ளர் உளுந்துடன் சிறிதளவு சாதம் சேர்த்து அரைத்து வடைசெய்தால், உளுந்து வடை சுவையாக, சாப்டாக இருக்கும்.

* ஆம்லெட் செய்யும் போது சிறிது வெண்ணெயை கலந்து முட்டையில் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

* ஆரஞ்சு பழத் தோல்களை குப்பையில் எறிந்து விடாமல் அதனை தேநீர் தயாரிக்கும் போது சிறிதளவு போட்டு தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் நல்ல மணமாக இருக்கும்.

Tags :
|
|