Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நாய்களுடன் குழந்தைகள் விளையாடும் போது ஏற்படும் பாதிப்புகள்

நாய்களுடன் குழந்தைகள் விளையாடும் போது ஏற்படும் பாதிப்புகள்

By: Karunakaran Wed, 07 Oct 2020 5:31:09 PM

நாய்களுடன் குழந்தைகள் விளையாடும் போது ஏற்படும் பாதிப்புகள்

தனிமைக்கு ஏற்ற துணையாக திகழுவதால் பெரும்பாலான வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. கொரோனா காரணமாக பலரும் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதை போக்க நாய்கள் துணைபுரிகின்றன. நாய்களோடு பிள்ளைகள் அதிக பாசம் கொண்டு விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டு விபரீதமாகிவிடக்கூடாது. பொதுவாக வீட்டில் வளர்க்கும் நாய்களால் ஆபத்து ஏற்படுவதில்லை. இருப்பினும் திடீரென்று நாய் கடித்துவிடவோ அல்லது வேறுவிதங்களில் காயம் ஏற்படுத்தி விடவோ வாய்ப்புள்ளது.

நாய் கடித்தால் ஆழமான காயம் என்றால் சுத்தமான துணியால் லேசாக அழுத்தி, இரத்தம் வெளியேறுவதை தடுக்க வேண்டும். இரத்தப்போக்கு நின்ற பிறகு காயத்தை கழுவி சுத்தப்படுத்தவேண்டும். காயம் அடைபட்ட நிலையில் இருந்தால் அதில் கிருமிகள் பெருகி கிருமித்தொற்று ஏற்பட்டுவிடும். அதனால் காயத்தை துணியால் கட்டக்கூடாது. முதல் உதவி செய்த பின்பு அதற்குரிய டாக்டரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

infections,children,dogs,play ,நோய்த்தொற்றுகள், குழந்தைகள், நாய்கள், விளையாடு

சிறிய காயம் என்றாலும் அந்த இடத்தில் நிறைய தண்ணீரைவிட்டு கழுவி ஆன்டிசெப்டிக் கிரீம் பூச வேண்டும். நாய் கடியால் பாதிக்கப்பட்டவர், விஷ முறிவுக்கான ஊசியை போட்டுக்கொள்வது முக்கியம். பாதிக்கப்பட்டது குழந்தை என்றால், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, அந்தக் குழந்தைக்கு ஏற்கனவே போடப்பட்டிருக்கும் நோய்த் தடுப்பு ஊசிகள் பற்றிய விவரத்தை எடுத்துச்செல்லவேண்டும். ஐந்து வருடத்திற்குள் டெட்டனஸ் வாக்சின் போடப்பட்டிருந்தால், மீண்டும் போடவேண்டியதில்லை.

பழக்கமுள்ள நாயாக இருந்தாலும், குழந்தைகளை அதனுடன் விளையாட அனுமதிக்காதீர்கள். நாய் அமைதியானதாக இருந்தாலும் அது தூங்கும்போதோ, உணவருந்தும்போதோ தன்னை தொந்தரவு செய்வதை அவை விரும்புவதில்லை. வளர்ப்பு நாய்களுக்கு எல்லாவிதமான தடுப்பூசிகளையும் அந்தந்த காலகட்டத்தில் போட்டுவிடுங்கள். நாய்கள் அன்பானவைதான். இருப்பினும் கவனமாக இருக்க வேண்டும்.

Tags :
|