Advertisement

கேன் வாட்டர் உடலுக்கு நல்லதா?

By: Monisha Wed, 25 Nov 2020 11:54:21 AM

கேன் வாட்டர் உடலுக்கு நல்லதா?

தூய்மையான நீரே உடலுக்கு நல்லது என்று நாம் நினைத்து பயன்படுத்தும் பல வகையான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உடல் உறுப்புகளுக்கு நன்மை அளிக்குமா என்று இந்த பதிவில் பார்கலாம். நாம் பயன்படுத்தும் தண்ணீரில் துத்தநாகம், நைட்ரேட், இரும்பு, காப்பர், சல்ஃபைட் போன்ற தனிம தாதுக்கள் இருக்கும். இதையே டிடிஎஸ் (Total dissolved solids) என்று குறிப்பிடுவார்கள். குடிநீர் பாட்டிலில் 20 வரையிலும், மெட்ரோ நீரில் 60 வரையிலும் டிடிஎஸ் இருக்க வாய்ப்புள்ளது.

தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான தாதுக்களைப் பிரித்தெடுக்கும் சாதனங்கள் இயற்கை தாதுக்களையும் சேர்த்து பிரித்துவிடுகின்றன. அதனால் தாதுக்களே இல்லாத நீரால் சிறுநீரகம் தன்னுடைய வேலையை இழக்கிறது. தண்ணீர் சுத்திகரிப்பின் போது மாசுக்கள் அகற்றப்படலாம். மாறாக இயற்கை உப்புக்களும் சேர்ந்து வடிகட்டப்படுவதால் தண்ணீர் வெறுமனே நீராகிறது.

தண்ணீரில் தாது உப்புகள் இல்லாத பட்சத்தில் நீரானது சரியாக சுத்திகரிக்கப்படாவிட்டால் அதில் நச்சுத்தன்மையுள்ள கனிமங்கள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும். இதைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு சரும நோய்கள், கால்சியம் குறைபாடு, எலும்புகள் பலவீனம் என்ற ஆரோக்கிய குறைபாடு உண்டாகிறது. மேலும் சுகாதாரமற்ற நீரால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு, ஹெபடைட்டிஸ் போன்ற நோய்களும் வருகின்றன.

canned water,body,nitrate,iron,copper ,கேன் வாட்டர்,உடல்,நைட்ரேட்,இரும்பு,காப்பர்

மினரல் வாட்டர் கேன்களை ஆறுமாதங்கள் மட்டுமே பயன்படுத்த தகுதிவாய்ந்தவை. ஆனால் குடிசைத் தொழில் போல் கேன் வாட்டரில் ஈடுபட்டிருக்கும் போலி நிறுவனங்கள் அழுக்கடைந்த கேன்களிலேயே மீண்டும் தண்ணீர் நிரப்பி கொண்டு வருகின்றன. அப்படி வரும் கேனை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.

நகரங்களில் கார்ப்பரேஷன் வாட்டரைப் பெறமுடியாதவர்கள் தவிர்க்க முடியாத சூழலில் ஐஎஸை முத்திரை கொண்ட நீரை பயன்படுத்தலாம். ஆனால் வாங்கும் போது தயாரிப்பு தேதி பார்த்து வாங்குங்கள். கேன் வாட்டர் வாங்குவதாக இருந்தாலும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவில் மட்டுமல்ல. குடிக்கும் நீரிலும் உண்டு.

Tags :
|
|