Advertisement

மயோனைஸ் சாப்பிடுவது ஆரோக்கியம் தருமா?

By: Monisha Mon, 14 Dec 2020 09:14:20 AM

மயோனைஸ் சாப்பிடுவது ஆரோக்கியம் தருமா?

துரித உணவு வகைகளோடு சேர்த்து சாப்பிடும் உணவு மயோனைஸ். இதனை சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். சாண்ட்விட்ச், பர்கர், சிக்கன், க்ரில் என அனைத்து உணவுகளின் சுவைக்காக பலரும் மயோனைஸை சாப்பிடுகின்றனர். இந்த பதிவில் மயோனைஸ் சாப்பிடுவது ஆரோக்கியம் தருமா என்று பார்க்கலாம்.

மயோனைஸ் என்பது முட்டை வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, எண்ணெய், சர்க்கரை, உப்பு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அப்படி தயாரிக்கப்படும் இந்த மயோனைசில் பாக்டீரியாக்கள் எளிதில் இனப்பெருக்கம் செய்யவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஏனெனில் மயோனைஸை தயாரித்து சரியாக சேமித்து ஃபிரிட்ஜில் பராமரிக்காமல் இருந்தால் ஒரே நாளில் கெட்ட கிருமிகள் இனப்பெருக்கம் செய்துவிடும். ஆகவே இது உடலுக்கு ஆபத்தானது. மேலும் கடைகளில் விற்கப்படும் மயோனைஸில் பதப்படுத்த தேவையான மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்படும் மூலக்கூறுகள் சிலருக்கு உடலில் பலவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

mayonnaise,health,fast food,bacteria,body weight ,மயோனைஸ்,ஆரோக்கியம்,துரித உணவு,பாக்டீரியா,உடல் எடை

மேலும் இதனை அதிக அளவில் சாப்பிடும் போது புற்றுநோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இதில் சேர்க்கப்படும் எண்ணெய் அதிக கொழுப்பு நிறைந்தது. அதாவது ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டதாம். எனவே இது உடலில் கலோரி அளவை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும். ஆகவே இது ஆபதனாது.

அப்படி இருந்தும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் குறைந்த கொழுப்பு கொண்ட மயோனைஸ் சாப்பிடலாம். இது சிறிதளவு சுவை குறைவாக இருக்கும். ஆனால் உடல் எடைக் குறைக்க நினைப்போருக்கு இது சிறந்தது. ஆனாலும் நோயில்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைப்போர் இதை தவிர்ப்பது நல்லது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Tags :
|