Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டும் நாள்களில் மூலிகை மருந்து கொடுப்பது சரியா? தெரிந்துக் கொள்ளலாம்..

குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டும் நாள்களில் மூலிகை மருந்து கொடுப்பது சரியா? தெரிந்துக் கொள்ளலாம்..

By: Monisha Fri, 08 July 2022 8:05:09 PM

குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டும் நாள்களில் மூலிகை மருந்து கொடுப்பது சரியா? தெரிந்துக் கொள்ளலாம்..

பிறந்த குழந்தைகளுக்கு சளி பிடிக்காமலிருக்க வெற்றிலைச்சாறு கொடுக்கச் சொல்கிறார்களே.அது குறித்து சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.வெற்றிலைக்கு சிறப்பான ஒரு குணம் உண்டு. அதாவது குரல் கம்முதல், தலைபாரம், மண்டையில் நீரேற்றம், நுரையீரல் சளி, இருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது வெற்றிலை.

பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிலைச்சாறு கொடுக்கலாம்.வெற்றிலைச்சாறு காரச்சுவை கொண்டது என்பதால் 2 அல்லது 3 சொட்டு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து கொடுக்கலாம்.வெற்றிலையை இன்னொரு முறையிலும் குழந்தைகளுக்கு மருந்தாகத் தரலாம்.

baby,medicine,herbal,bath ,குழந்தை,வெற்றிலை,தேன் , குணம்,

வெற்றிலை போலவே குழந்தைகளுக்கு துளசி, ஓமவல்லி, முருங்கை இலை, வேப்பிலை, நுணா இலை, ஆடாதோடா இலை போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இவற்றில் நுணா இலை போன்று பெரிய இலையாக இருந்தால் ஒன்று எடுத்துக்கொள்ளலாம். துளசி, வேப்பிலை போன்றவற்றை மூன்று இலைகள் எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்குத் தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தைக் கொடுக்கலாம். அதனால் குழந்தைகளுக்கு சளி பிடிக்காது. வயிற்றில் மாந்த உணர்வு ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, செரிமான கோளாறுகளும் நீங்கும் என்று கூறினார்.

Tags :
|
|