Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கர்ப்ப காலத்தில் ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை தடுக்க முடியுமா ?

கர்ப்ப காலத்தில் ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை தடுக்க முடியுமா ?

By: Karunakaran Fri, 04 Dec 2020 1:45:50 PM

கர்ப்ப காலத்தில் ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை தடுக்க முடியுமா ?

நிற்பது, நடப்பது, அமர்வது, ஓடுவது போன்ற மூளையின் ஆணைகளை கட்டுப்படுத்தி, செயல்படுத்துவது முதன்மை கம்பித்தடம் போன்ற நமது தண்டுவட நரம்புகளே. மூளை, தண்டுவடம் என்கிற இந்த முக்கிய உறுப்புகள் இரண்டையும் பல அடுக்கு பாதுகாப்புடன் படைத்துள்ளது இயற்கை. மூளைக்கு எப்படி மெனிஞ்சஸ் என்கிற மூன்றடுக்கு பாதுகாப்பு உறையும் அதற்கு மேல் மண்டையோடு என்கிற உறுதியான வளையமும் இருக்கின்றனவோ, அதேபோல் மூளையில் இருந்து வெளிவரும் நரம்பு மண்டலத்துக்கும் மெனிஞ்சியல் உறைகளும் அதற்கு மேல் முதுகுத் தண்டுவட எலும்புகளும் பாதுகாப்பை வழங்குகின்றன.

மூளையை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் சி.எஸ்.எப். என்கிற மூளை தண்டுவட திரவம், தண்டுவட நரம்புகளின் வெப்பத்தைச் சீராக்கி பாதுகாக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக, தோல் என்கிற முக்கிய உறுப்பு, வெப்பத்தின் அளவை மாற்றும் குளிர்சாதன பெட்டிபோல் வேலை செய்வதால்தான், நம்மால் இயங்கவே முடிகிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் கரு உருவாகும் தொடக்க நாட்களிலேயே, பல்வேறு காரணங்களால் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் ஒன்றோ இரண்டோ உருவாகாமல் போக நேரிடலாம்.

birth defects,spina bifida,encephalocele,pregnancy ,பிறப்பு குறைபாடுகள், ஸ்பைனா பிஃபிடா, என்செபலோசெல், கர்ப்பம்

இதனால், அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதை தடுப்பது மிக எளிது. பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பருப்பு, கொட்டை வகைகள், சிறுதானியம் போன்றவற்றை உண்ணும்போது இவற்றில் இயற்கையாகவே காணப்படும் போலிக் அமிலம், செல்களின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. வளர்ச்சிக்கும், மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது. அத்துடன், ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கிறது.

கருவில் வளரும் குழந்தைக்கு நன்மை செய்வது மட்டுமன்றி, கருச்சிதைவையும் குறைப்பிரசவத்தையும் கட்டுப்படுத்தி, தாயின் ரத்த சோகைக்கும் அருமருந்தாவதால் ‘கருவின் தோழி‘ என்று கொண்டாடப்படுகிறது போலிக் அமிலம் என்கிற இந்த எளிய ‘பி‘ விட்டமின். ஆனால், இயற்கை தரும் உணவு வகைகளில் இருக்கும் போலிக் அமிலம், சமைக்கும்போது நீரில் கரைந்து சிதைந்துவிடுவதால், 400 முதல் 600 மெக் போலிக் அமில மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.

Tags :