Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தைராய்டு பிரச்சினையால் உடல் எடை அதிகரித்து கொண்டே செல்கிறதா?

தைராய்டு பிரச்சினையால் உடல் எடை அதிகரித்து கொண்டே செல்கிறதா?

By: Monisha Fri, 06 Nov 2020 12:31:35 PM

தைராய்டு பிரச்சினையால் உடல் எடை அதிகரித்து கொண்டே செல்கிறதா?

தைராய்டு பிரச்சினையால் உங்கள் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறதா? இந்த பிரச்னையை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை நீங்கள் தொடர்ந்து செய்து உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுங்கள்.

காலை உணவோடு குறைந்தது 20 கிராம் புரதத்தை எடுக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் இது உங்களுக்கு ஒரு சிறிய வளர்சிதைமாற்ற ஊக்கத்தை அளிக்கும். தினசரி புரதம் கொள்வது 70 தில் இருந்து 100 கிராம் வரை இருக்க வேண்டும். உருளைக்கிழங்கு, கொட்டைகள், மீன்கள், தோல் இல்லாத கோழி போன்ற மெலிந்த புரதத்தை சாப்பிடுங்கள். போதுமான அளவு புரதம் முடி உதிர்வதை தடுக்கும்.

அயோடின் பற்றாக்குறை தைராய்டுக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். அயோடின் குறைபாடு தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை குறைக்க வழி வகுக்கிறது. இதனால் மோசமான வளர்சிதை மாற்றம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது. எனவே அயோடின் நிறைந்த உணவுகள் கடல் பாசிகள், கடல் உணவுகள், கடல் மீன்கள் மற்றும் செலினியம் நிறைந்த இறைச்சி, கோழி, பால் பொருட்கள், பூண்டு, வெங்காயம், சுத்திகரிக்கப்படாத தானியங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

thyroid,body weight,protein,iodine,sodium ,தைராய்டு,உடல் எடை,புரதம்,அயோடின்,சோடியம்

ஹைப்போ தைராய்டிசம் மூலம் அதிக எடை அதிகரிப்பதற்கு சோடியம் ஒரு காரணம். உங்களால் முடிந்த அளவு சோடியத்தை உங்கள் உணவில் இருந்து குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 500 மில்லிகிராம் சோடியத்தை விட அதிகமாக உட்கொள்ள வேண்டாம். ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட அல்லது ஜங்க் உணவுகளை தவிர்க்கவேண்டும். அவற்றில் பல சோடியம் அதிகம் உள்ளவை. உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்சா, பர்கர், கேக் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை சோடியம் அதிகம் உள்ளவை.

உப்பு சேர்த்த கொட்டைகள், உப்பு சேர்த்த நொறுக்கு தீனிகள், ஊறுகாய், சாஸ், உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சாலட் சாப்பிடும் போது உப்பு சேர்க்காமல் சாப்பிடவேண்டும்.

thyroid,body weight,protein,iodine,sodium ,தைராய்டு,உடல் எடை,புரதம்,அயோடின்,சோடியம்

சர்க்கரை பானங்கள் குறிப்பாக பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்களைத் தவிர்க்கவேண்டும். உணவு சாப்பிடும் பொழுது நன்றாக ஜீரணிக்க மெதுவாகச் சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு 10 லிருந்து 12 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை பானங்கள் போன்ற இயற்கை பானங்களை குடியுங்கள். இது நாள் முழுவதும் வளர்சிதை மாற்ற விகிதத்தை உயர்த்தும். ப்ராக்கோலி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஹைப்போதைராய்டிசத்தில் உங்கள் உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்த விரும்பினால் உங்கள் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு முக்கியப் பகுதியாகக் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்வது கலோரிகளை எரிக்கிறது. மேலும் குறைவான வளர்சிதை மாற்றத்தின் விளைவுகளை உங்களால் எதிர்கொள்ள முடியும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் போதுமானது.

Tags :
|