Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வெள்ளைச்சர்க்கரை நல்லதா? நாட்டுச்சர்க்கரை நல்லதா!!!

வெள்ளைச்சர்க்கரை நல்லதா? நாட்டுச்சர்க்கரை நல்லதா!!!

By: Nagaraj Sun, 25 Dec 2022 10:58:51 PM

வெள்ளைச்சர்க்கரை நல்லதா? நாட்டுச்சர்க்கரை நல்லதா!!!

சென்னை: நீரிழிவு என்பது பரம்பரை வியாதி என்பது மாறி காய்ச்சல், சளி போல அனைவருக்கும் உண்டாக காரணமாக இருப்பதே வெள்ளை சர்க்கரை தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நமது முன்னோர்கள் உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காரம் போன்றவற்றை மிகுந்த நேர்த்தியாக கையாண்டனர். ஒவ்வொரு சுவைக்கும் இயற்கை ரீதியாகவே பல்வேறு பொருட்களை கையாண்டனர். இயற்கையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தனர்.

liver,cane sugar,toxins,cleansing,factor,white sugar ,கல்லீரல், கரும்பு சர்க்கரை, நச்சுக்கள், சுத்திகரிப்பு, காரணி, வெள்ளை சர்க்கரை

நமது பாரம்பரியத்தை சீரழிக்கவும், நாகரீகம் என்ற போர்வையில் பல்வேறு பக்கவிளைவுகளை உருவாக்கும் பொருட்களை மனிதன் இடையில் புகுத்தியதன் விளைவு இன்று நோய் இல்லாத மனிதர்களை உருவாக்க காரணமாக அமைந்து விட்டது. மேற்கண்ட கெடுதல் தரும் பொருட்களில் முதன்மையாக இருப்பது வெண் சர்க்கரை, வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும்.


ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி வெல்லம், கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை. நீரிழிவு என்பது பரம்பரை வியாதி என்பது மாறி காய்ச்சல், சளி போல அனைவருக்கும் உண்டாக காரணமாக இருப்பதே இந்த வெள்ளை சர்க்கரை தான்.

உணவில் நிற வேறுபாடு ஏற்பட்ட பிறகு தான் நமது உடலிலும், உடல் நலத்திலும் நிறைய வேறுபாடுகள் உண்டாக ஆரம்பித்தன. கல்லீரல் சுத்திகரிப்பு: வெள்ளை சர்க்கரையில் ஃபிரக்டோஸ் அளவு அதிகம். இது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு காரணியாக இருக்கிறது. இதனால் கல்லீரல் செயல்திறன் பாதிப்பு அதிகரிக்கிறது. கரும்பு சர்க்கரையில் இதுபோன்ற பிரச்சனையில்லை. நமது கல்லீரல் மட்டுமின்றி உடலில் இருக்கும் நச்சுக்களையும் போக்கி சுத்திகரிப்பு செய்ய கரும்பு சர்க்கரை உதவுகிறது.

Tags :
|
|
|