Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மொச்சைக்கொட்டையில் உள்ள ஐசோபிளேவோன்கள் ரத்தக் கொழுப்பு அளவை குறைக்கிறது

மொச்சைக்கொட்டையில் உள்ள ஐசோபிளேவோன்கள் ரத்தக் கொழுப்பு அளவை குறைக்கிறது

By: Nagaraj Fri, 23 Sept 2022 10:19:16 PM

மொச்சைக்கொட்டையில் உள்ள ஐசோபிளேவோன்கள் ரத்தக் கொழுப்பு அளவை குறைக்கிறது

சென்னை: மொச்சைக்கொட்டையில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மொச்சைக்கொட்டையில் இருக்கும் ஐசோபிளேவோன்கள் இரத்தக் கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய் வராமல் குறைகிறது. இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான ஃபோலியேட் மற்றும் வைட்டமின் கே இதில் அதிகம் உள்ளது.

எலும்புகளை மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்ற உதவுகிறது. எனவே எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முதுமையில் ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து இது பாதுகாக்கிறது.

சருமம் உடலின் ஒரு முக்கியமான அங்கமாகும். அது வானிலை மற்றும் மருத்துவம் போன்ற சூழ்நிலையினால் சேதமடைகிறது. மொச்சைக்கொட்டை நாம் உண்பதால் சருமத்தின் அடியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் செயல்பாட்டை இது அதிகரிக்கிறது.

moles,dark circles,benefits,skin,important ,மொச்சை, கருவளையங்கள், நன்மைகள், சருமம், முக்கியம்

முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கருவளையங்கள் போன்றவற்றை தடுத்து, மிகவும் ஆரோக்கியமான தோற்றத்தை பெறச் செய்கிறது.

ஒரு கப் மொச்சைக்கொட்டையில் 38 மில்லி கிராம் சோடியம் உள்ளது. உங்கள் உடலுக்குள் சமநிலையை நிர்வகிப்பதற்கு சோடியம் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது. மொச்சைக் கொட்டை போன்ற தாவர அடிப்படையிலான பொருட்கள் பொதுவாக சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் இருக்கும்.

இந்த மொச்சைக்கொட்டை இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது. இதில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தசோகை, சோர்வு, தசை பலவீனம், மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மொச்சைக்கொட்டையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் கொண்டுள்ளது. கீல்வாதம் அல்லது முடக்கு வாதம் போன்ற வேறு ஏதேனும் வீக்கம் தொடர்பான பிரச்சினகள் இருந்தால், இதை உட்கொள்வது சிறந்த உணவாக இருக்கும். மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். சுவாசப் பாதையில் உள்ள வீக்கத்தை குறைக்க இது உதவுகிறது.

Tags :
|
|