Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் முடக்கத்தான் பொடி

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் முடக்கத்தான் பொடி

By: Nagaraj Thu, 15 Sept 2022 10:08:14 AM

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் முடக்கத்தான் பொடி

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது முடக்கத்தான் பொடி. இதை எப்படி செய்வது இதன் பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உலர்ந்த முடக்கத்தான் கீரை - 2 கப்
கடலைப்பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 12
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

arm,leg,joint pain,paralyzing powder,gout,gas ,கை, கால், மூட்டு வலி, முடக்கத்தான் பொடி, போக்கும், வாயுக்கள்

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும். அதில் பெருங்காயம் தாளிக்கவும். பின்னர், பருப்பு வகைகளை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பருப்புகளை தனியே வைக்கவும். பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் உலர்ந்த கீரையை அதில் சேர்த்து வறுக்கவும்.

கீரை மொறு மொறு என பொரிந்தவுடன் இறக்கி ஆறவிடவும். பின்னர், எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். சூடு ஆறியதும் இந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். சூடான சாதத்தில் சிறிது எண்ணெய் விட்டு இந்த பொடியுடன் பரிமாறவும். இந்த பொடி இட்லி தோசைக்கும் நன்றாக இருக்கும்.


பலன்கள்: முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டு மற்றும் எலும்புகள் வலுவாகும். மலக்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன. வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். நிணநீர் மண்டலங்களில் உள்ள தேவையற்ற வாயுக்களை நீக்கி கை, கால் மூட்டு வலிகளைப் போக்கும்.

Tags :
|
|
|