Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்ட பலாப்பழம்

நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்ட பலாப்பழம்

By: Nagaraj Thu, 22 Dec 2022 11:17:36 PM

நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்ட பலாப்பழம்

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்... பலாப்பழத்தில் இருக்கும் தாது, வைட்டமின் சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

பலாப்பழம் எல்லோருக்கும் பிடித்தமானது. அனைவரும் அதனை ரசித்து, சுவைப்பார்கள். சத்துக்கள் நிறைந்த பலாப் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. இந்தப் பழத்தின் அனைத்து பகுதிகளுமே உணவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பலாப்பழத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய சர்க்கரை சத்துக்களான ப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை உள்ளன. 100 கிராம் பழத்தில் 95 கலோரி உள்ளது. நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. 100 கிராம் பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஒருவருக்கு ஒரு நாள் தேவைப்படும் வைட்டமின்-ஏ சத்தின் அளவை ஈடுகட்ட அவர் 200 கிராம் பலாப்பழம் சாப்பிடவேண்டும். 100 கிராம் சாப்பிட்டால் அவரது வைட்டமின்-ஏ தேவையில் பாதி அளவு ஈடுகட்டப்படும்.

 ,நம்மை காக்கும், வைட்டமின் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, பலாப்பழம்

பலாப்பழ விதைகளை காயவைத்து தூளாக்கி அந்த மாவில் இருந்து பலவகையான பலகாரங்களை தயார் செய்து சுவைக்கலாம். பலாப்பழ விதைகளும் சத்து நிறைந்ததே. மாமிசத்தில் இருக்கும் புரோட்டீன் சத்து பலாப்பழ விதையில் உள்ளது. பைட்டோ நியூட்ரிஷியன்ஸ், ப்ளோவனாயிட்ஸ் போன்றவை அதிகமாக இருப்பது புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும்.

பலாக்காயை ‘ஏழைகளின் இறைச்சி’ என்று குறிப்பிடுவார்கள். காயின் தசைப்பகுதியை மாமிச உணவுகளின் ருசியுடன் தயாரித்து உண்ணலாம். இது இரத்த சோகை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் வைட்டமின்-ஏ சத்து பார்வைத் திறனையும் மேம்படுத்தும்.

பலாப்பழத்தில் இருக்கும் தாது, வைட்டமின் சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

Tags :