Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வயிற்றுப்பூச்சிகளை சுத்தம் செய்ய உதவும் மல்லிகைப்பூக்கள்

வயிற்றுப்பூச்சிகளை சுத்தம் செய்ய உதவும் மல்லிகைப்பூக்கள்

By: Nagaraj Sun, 20 Nov 2022 9:52:12 PM

வயிற்றுப்பூச்சிகளை சுத்தம் செய்ய உதவும் மல்லிகைப்பூக்கள்

சென்னை: மல்லிகை பூக்களின் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா. மல்லிகைப்பூ வயிற்றுப் பூச்சிகளை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. மல்லிகைப் பூக்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும்.

அதை அப்படியே குடிக்க வேண்டும். சுவைக்கு தேன் மற்றும் நாட்டு சக்கரை எதுவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனை குடித்த பிறகு ஒரு மணி நேரம் வரை வேறு எதையும் குடிக்கக் கூடாது. இதனை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இது சருமத்தில் உண்டாகும் வெண் புள்ளிகளையும் குறைக்கும்.

பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு தாய்ப்பால் கட்டிக் கொள்வது மிகப்பெரிய அவதி. அவ்வாறு தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மல்லிகைப் பூக்களை அரைத்து லேசாக நீர் விட்டு மார்பகத்தில் பற்று போட்டால் வலி குறைந்து பால் சுரப்பு வெளியேறும். இதனை மார்பகத்தில் நீர்க்கட்டி இருந்தாலும் மார்பக வலி இருந்தாலும் பயன்படுத்தலாம்.

நரம்பு தளர்ச்சியை குணப்படுத்த இது மிகவும் உதவுகிறது. இதனை பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் தேனில் அரை டீஸ்பூன் அளவு மல்லிகை பொடியை கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி தீரும். சருமநோய்கள் தீவிரமாக இருந்தால் மல்லிகைப்பூ செடியை வேரோடு பிடுங்கி வேரை மண் போக சுத்தம் செய்து காய வைக்க வேண்டும்.

medicinal,jasmine,kidney disorders,headache,powder ,
மருத்துவக்குணம், மல்லிகைப்பூ, சிறுநீரக கோளாறுகள், தலைவலி, பொடி

அதனை இடித்து பொடி செய்து பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பை பொடி சேர்த்து அதில் எலுமிச்சை பழச்சாறு விட்டு தேய்த்து குளித்து வந்தால் சரும வியாதிகள் அனைத்தும் குணமாகும். மேலும் சருமத்தில் கட்டிகள், புண்கள் மற்றும் வடுக்கள் இருந்தால் மல்லிகைப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை அதன் மேல் தடவி வந்தால் நாள்பட்ட தலைப்புகளாக இருந்தாலும் மறைந்துவிடும். சரும எரிச்சல் மற்றும் அரிப்பு இருந்தால் குணமாகும். பிரசவ கால தழும்புகளும் இது போக்கும்.

மல்லிகைப் பூக்கள் சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டவை. சிறுநீரக கோளாறு, சிறுநீரக எரிச்சல், நீர் சுளுக்கு மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தலாம்.

மல்லிகைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து காபி டீக்கு மாற்றாக மல்லிகைப்பூ டீ குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் சரியாகும். தலைவலி இருக்கும் போது மல்லிகைப்பூக்கள் 6 எடுத்து உள்ளங்கையில் கசக்கி நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

Tags :