Advertisement

பல்வேறு நோய்களை குணப்படுத்தும் கீழாநெல்லி

By: Nagaraj Fri, 29 Sept 2023 10:47:54 PM

பல்வேறு நோய்களை குணப்படுத்தும் கீழாநெல்லி

சென்னை: கீழாநெல்லி சிறந்த மருந்து... மஞ்சள் காமாலை, குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற்றோட்டம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப் பீனிசம், ஓயாத்தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும். ஓரிதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.

ghee,mushroom diseases,herb,blood,sugar level ,கீழாநெல்லி, காளான் நோய்கள், மூலிகை, இரத்தம், சர்க்கரையின் அளவு

கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும். கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையது. மேலும் கல்லீரலை பாதுகாக்கும்.

Tags :
|
|
|