Advertisement

ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கிவி பழம்!

By: Monisha Wed, 03 June 2020 12:55:13 PM

ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கிவி பழம்!

கிவி பழத்தில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவும். கிவி பழம் உடலின் நீர்ச்சத்து மற்றும் pH அளவை கட்டுப்படுத்தும். அதோடு உடலின் நரம்பு செல்கள் மூளையுடன் தொடர்பு கொள்ளும் திறனை அமினோ அமிலங்கள் மேம்படுத்தும்.

கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.

கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைத் தடுக்கும்.

health benefits,kiwi fruit,calcium,antioxidant,asthma ,ஆரோக்கிய நன்மைகள்,கிவி பழம்,கால்சியம்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்,ஆஸ்துமா

கிவி பழம் ஆஸ்துமாவை சரிசெய்யும் திறன் கொண்டது. இதற்கு இதில் உள்ள வைட்டமின் சி தான் காரணம். ஆய்வுகளில் கிவி பழத்தை வாரத்திற்கு 1-2 சாப்பிடுவதன் மூலம், சுவாச நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்த பழம் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்து, நுரையீரலின் செயல்பாட்டிற்கு உதவும். முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழம் மிகவும் நல்லது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்தாகும்.

Tags :