Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அனைத்து விதமான நோயையும் தடுக்கும் வைட்டமின் சி சத்து அடங்கிய கிவி பழம்

அனைத்து விதமான நோயையும் தடுக்கும் வைட்டமின் சி சத்து அடங்கிய கிவி பழம்

By: Nagaraj Sat, 09 Sept 2023 07:26:12 AM

அனைத்து விதமான நோயையும் தடுக்கும் வைட்டமின் சி சத்து அடங்கிய கிவி பழம்

சென்னை எல்லாவிதமான நோயையும் தடுக்கும் சக்தி கிவி பழத்திற்கு உண்டு. காரணம் இதில் அதிகமாக இருக்கும் வைட்டமின் சி சத்து தான். இதனை பசலிப்பழம் என்றும் அழைப்பார்கள். கிவிப் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கலந்தது.

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள பெர்ரி வகை பழங்கள் தான் கிவி பழங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இயற்கை அளிக்கும் அனைத்துவித பழங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியதுதான். அவ்வாறு இங்கு கிவி பழம் தரும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.

ஒரு கிவி பழத்தில், ஒரு நாள் முழுவதும் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து 120% உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக இதில் உள்ளது. கிவி பழத்தில் வைட்டமின் பி3, பி5, பி6, சி, ஈ, பீட்டா கரோட்டின், பயோட்டின், ஃபோலிக் அமிலம், லுட்டீன், கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம், நார்சத்து, மாவு சத்து என 21 சத்துக்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.

fiber,kiwi fruit,weight loss,digestion,benefits ,நார்ச்சத்து, கிவி பழம், உடல் எடை, குறைப்பு, செரிமானம், நன்மை

கிவி பழத்தில் உள்ள வைட்டமின் பி3 உடலில் தேவையற்று இருக்கும் விஷ பொருளை அகற்றுகிறது. இதனால் இளமையிலேயே முதுமை அடைவது தடுக்கிறது. கிவி பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது. இது கண்பார்வைக்கும் உடல் நலத்திற்கும் நல்லது. கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

கிவி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும்.

கிவி பழத்தில் நார்சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் நார்சத்து செரிமான கோளாறுகளையும் சரி செய்யும்.

Tags :
|