Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை அகற்றும் கிவி பழம்!

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை அகற்றும் கிவி பழம்!

By: Monisha Tue, 25 Aug 2020 1:03:22 PM

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை அகற்றும் கிவி பழம்!

கிவி பழத்தில் ஏராளமான ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. கிவியில் உள்ள பொட்டசியம் மற்றும் நார் சத்து உங்கள் இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவும். கிவி பழத்தை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், சுவாசம் குறித்த பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குணமடையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிவி பழத்தை முந்திரி, பாதம், கீரை வகைகள், மற்றும் காளான் போன்றவற்றோடும் சாப்பிடலாம். இது நல்ல சுவையைத் தரும். ஒரு நாளைக்கு மூன்று என்ற விகிதத்தில் எட்டு வாரத்திற்கு தொடர்ந்து இதனை சாபிட்டால் அதிக இரத்த அழுத்தம் குணமடையும். கிவி பழத்தை, தேன், பால், மற்றும் ஓட்ஸ், இவைகளோடு சாலடாக செய்து சாபிட்டால் நல்ல ருசியோடு, நற்பலனையும் தரும்.

கிவியில் அதிகம் நார்சத்து நிறைந்துள்ளதால் இது உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகின்றது. இதனால் உடல் எடை அதிகமாவதையும் குறைத்து, சீரான உடல் எடை பெற உதவுகின்றது.

kiwi fruit,health,asthma,blood pressure,bad cholesterol ,கிவி பழம்,ஆரோக்கியம்,ஆஸ்துமா,இரத்த அழுத்தம்,கெட்ட கொழுப்பு

கிவி பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குறிப்பாக இரத்த அழுத்தம் அதிகம் இருந்தால், அதனை சரி செய்து சீரான அளவிற்கு பெற உதவும். அதிக அளவு சோடியம் எடுத்துக் கொள்ளும் போது, இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. எனினும், கிவி பழம் அதனை சீர் செய்ய உதவுகின்றது.

கண்களுக்கு கீழ் கரும் வளையம் தோன்றுவது இயல்பே. எனினும், இது முக அழகை குறைக்கும். அதனை போக்க, கிவி பழம் பெரிதும் உதவும். கிவி பேஸ் பாக் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வரும் போதும், கரும் வளையம் மறைந்து, நல்ல சுத்தமான மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கும்.

Tags :
|
|