Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சர்க்கரை நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் அறிவோம்

சர்க்கரை நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் அறிவோம்

By: Nagaraj Tue, 01 Nov 2022 10:37:51 AM

சர்க்கரை நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் அறிவோம்

சென்னை: சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது.


சர்க்கரை என்பது என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகளவாக இருக்கிறது என்று அர்த்தம். உலகில் அதிக சர்க்கரை நோயாளிகளை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா சீனாவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. நமது வாழ்க்கை முறை என்பது இன்றைய காலப்பகுதியில் வெகுவாக மாறி விட்டது.

உடல் உழைப்பு இல்லாமல் உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. உடல் பருமன் சர்க்கரை நோய்க்கான முக்கியமான காரணியாக இருக்கின்றது. சர்க்கரை நோய் என்பது பரம்பரையாகவும் ஏற்படக்கூடியது. அதே போல உணவு பழக்கம் என்பதும் ஆரோக்கியமான உணவுகளை விடுத்தது சுவையான உணவுகளை நோக்கிய உணவு முறையாக மாறி விட்டது.

 ,சர்க்கரை நோய், எரிச்சல், உடல் சோர்வு, உடல் அசதி, கால்களில் குத்தல்

தவறான உணவு முறையும் சர்க்கரை நோய் வருவதற்கான ஒரு காரணியாக அமைகின்றது. சரியான தூக்கம் இன்மை மற்றும் அதிக மனஅழுத்தம் போன்ற காரணிகளும் சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக அமைகின்றன.

நம்மில் பலருக்கு சர்க்கரை நோய் இருக்குமோ என்றோ அல்லது அவர்களுக்கு இருக்கும் அறிகுறிகளில் ஒன்று சர்க்கரை நோயாக இருக்குமோ என்றோ பலவித சந்தேகங்கள் இருக்கும். அதிக தாகம், அதிக பசி மற்றும் அதிகமாக சிறுநீர் கழித்தல். குறிப்பாக இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தல். இரவில் இரண்டு முறை அல்லது அதற்கு மேலாக சிறுநீர் கழித்தல் போன்றவ சர்க்கரை நோய் அறிகுறிகள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுவதற்கு என்ன காரணம் என்றால் உடலில் இரத்தத்தில் அதிகமாக சர்க்கரை இருக்கும். இதனால் உடலில் இரத்தத்தில் அதிகமாக உள்ள சர்க்கரையை சிறுநீர் மூலம் வெளியேற்றும். கால் பாகங்களில் குத்தல், எரிச்சல் போன்றவை இருத்தல். உடல் சோர்வு, உடல் அசதி மற்றும் கண்பார்வை மங்குதல் போன்ற காரணிகளும் சர்க்கரை நோய்க்கான ஒரு காரணியாக இருக்கின்றது

Tags :