Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நொச்சி இலையின் அற்புதமான மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

நொச்சி இலையின் அற்புதமான மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Sat, 25 Mar 2023 7:05:38 PM

நொச்சி இலையின் அற்புதமான மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: நொச்சி இலையின் அற்புதமான மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். நொச்சி இலை உண்மையிலேயே பல அபூர்வமான மருத்துவக் குணங்களைக் கொண்ட மகத்தான மூலிகையாகும்.

சித்த மருத்துவத்தில் இதற்கு மிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்;

நொச்சி இலை காய்ச்சலைப் போக்கும்; ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்; மாத விலக்கை தூண்டும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். நொச்சி பூ குளிர்ச்சி உண்டாக்கும்.

துவர்ப்புச் சுவையைத் தூண்டும். நொச்சி வேர், காய்ச்சலை கட்டுப் படுத்தும். கோழையை அகற்றும்; சிறுநீரைப் பெருக்கும்.

nochi leaf,flower,root,bark,medicinal uses,healing ,நொச்சி இலை, பூ, வேர், பட்டை, மருத்துவப் பயன்கள், குணமாகும்

நொச்சி சிறு மரமாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும். நொச்சி இலைகள், கைவடிவமான 3 அல்லது 5 கூட்டிலைகளுடன் கூடியவை. தலைகீழ் ஈட்டி வடிவமானவை.

மணமுள்ளவை. நொச்சி இலை கீழ்புறம் சாம்பல் நிறமான உரோமப் பூச்சு காணப்படும். நொச்சி மலர்கள் கொத்தாக நுனியில் அல்லது இலைக் கோணத்தில் அமைந்தவை. கருஞ்சிவப்பு அல்லது செங்கரு நீலமானவை. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வேலிகள், தரிசு நிலங்களில் இயற்கையாக வளர்கின்றது.

மலைப் பகுதிகளில் வளர்பவை அதிகமான உயரத்துடன் காணப்படும். இந்திர சூரியம், நித்தில், நிர்க்குண்டி, சிந்துவாரம் ஆகிய பெயர்களும் நொச்சிக்கு உண்டு. நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை.

ஒரு தேக்கரண்டி நொச்சி இலைச் சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு நெய் சேர்த்து, காலை, மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.

Tags :
|
|
|