Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆளி விதையை பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ஆளி விதையை பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Sun, 10 Sept 2023 9:05:28 PM

ஆளி விதையை பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்  பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: ஆளி விதைகள் மற்றும் பால் இரண்டிலும் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி6, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், புரதம், வைட்டமின் டி மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஒரு கிளாஸ் பாலில் 1 டீஸ்பூன் ஆளி விதை தூளை போட்டு கொதிக்க வைத்து தினமும் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆளி விதை பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலை இரவில் தூங்கும் போது குடிக்கலாம். இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

flaxseed,medicinal properties,problems,digestion,improves ,ஆளி விதை, மருத்துவ குணங்கள், பிரச்னைகள், செரிமானம், மேம்படுத்தும்

உடல் பருமனால் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் உருவாகிறது. ஆளி விதைகள் மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்வது எடையைக் குறைக்க உதவும். ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துகிறது.

ஆளி விதைப் பொடியை பாலில் கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆளி விதை பொடியை பாலில் கலந்து குடிப்பதால் அதில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயத்தை பாதுகாக்கும். ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தும். செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

Tags :