Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் எடையை குறைக்கச் செய்யும் கொள்ளு புலாவ் செய்முறை

உடல் எடையை குறைக்கச் செய்யும் கொள்ளு புலாவ் செய்முறை

By: Nagaraj Sat, 29 Aug 2020 11:59:28 AM

உடல் எடையை குறைக்கச் செய்யும் கொள்ளு புலாவ் செய்முறை

கொள்ளு உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. கொள்ளு வகையில் நாம் சட்னி, சூப் என நாம் செய்து சாப்பிட்டு இருப்போம். இப்போது கொள்ளு புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பாஸ்மதி அரிசி – 2 கப்
கொள்ளு – 3/4 கப்
கேரட்- 1 கப்,
உருளைக்கிழங்கு- 1 கப்,
பீன்ஸ் - ஒரு கப்
பட்டை- 1,
கிராம்பு- 1,
ஏலம்- 1,
பிரியாணி இலை - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
தயிர் - 1 கப்
பிரியாணி மசாலா தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
எண்ணெய்-2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

kollu pulao,basmati rice,biryani leaf,green chillies ,கொள்ளு புலாவ், பாஸ்மதி அரிசி, பிரியாணி இலை, பச்சை மிளகாய்

செய்முறை: கொள்ளு மற்றும் பாஸ்மதி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், தக்காளியினை நறுக்கி ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம், பிரியாணி இலை சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரியாணி மசாலா தூள், மிளகாய் தூள், தக்காளி, கொத்தமல்லி தழை, கொள்ளு, காய்கறி கலவை தயிர் உப்பு ½ கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

அடுத்து பாத்திரத்தில் அரிசி மற்றும் கொள்ளுவினை 2 மடங்கு தண்ணீர் சேர்த்து அரிசியை வேகவிட்டு, இதனுடன் கொள்ளு குருமா சேர்த்தால் கொள்ளு புலாவ் ரெடி.

Tags :