Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தக்கூடாத உணவு பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தக்கூடாத உணவு பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Sun, 19 Feb 2023 12:15:26 PM

மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தக்கூடாத உணவு பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை; உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? குருமா, பொரியல், வறுவல் என்று செய்து சாப்பிடுவார்கள். உருளைக் கிழங்கை சிலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

ஒரு தடவை வேக வைத்து எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டு ஒரு வாரம் வரைக்கும் தேவையான போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விதம் விதமாகச் சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது முற்றிலும் தவறான பழக்கம் என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். ஏன் தெரியுமா? சமைத்த உருளைக்கிழங்கானது அறை வெப்பநிலையில் சற்று நேரம் ஆற விட்டு விட்டால் பிறகு அதை மீண்டும் சூடுபடுத்தக் கூடாது என்பது அதற்கான உணவு விதிகளில் ஒன்று.

உருளைக் கிழங்கில் இருக்கும் க்ளாஸ்ட்ரிடியம் பாட்டுலினம் எனும் பாக்டீரியா பாட்டுலிஸம் எனப்படும் ஒவ்வாமைப் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது. இந்த பாக்டீரியாவுக்கு அறை வெப்பநிலையில் பல்கிப் பெருகும் திறன் உண்டு. எனவே பெரும்பான்மையான நேரங்களில் உருளைக் கிழங்கைச் சமைத்தால் உடனடியாகச் சாப்பிட்டோ அல்லது மீதமிருந்தால் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு கொடுத்தோ உடனடியாகக் காலி செய்து விடுவது நல்லது.

heating,foods,medical professionals,uttam,cylinder ,சூடுபடுத்தல், உணவுகள், மருத்துவ நிபுணர்கள், உத்தமம், உருளை

ஒருவேளை உருளைக் கிழங்கில் சாலட் செய்யும் முயற்சியிருப்பின் பொருத்தமான பாதுகாப்பான வழிமுறைகளில் சமைத்த உருளைக் கிழங்கை ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம்.

பீட்ரூட்: பீட்ரூட்டுகளில் நைட்ரேட் சத்து அதிகம் உண்டு. அவற்றை சமைத்த உடன் உடனடியாகச் சாப்பிட்டு விட்டால் நல்ல பலன் கிடைக்கும். ரத்த சுத்திகரிப்புக்கு மிகவும் அவசியமானது பீட்ரூட். பீட்ரூட்டை நாம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சூடுபடுத்தி சாப்பிடும் போது அவற்றில் அதிகமாக இருக்கக்கூடிய நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாறி விடும் சாத்தியமிருக்கிறது.

இந்த நைட்ரைட்டுகள் கார்சினோஜெனிக் ஏஜெண்டுகளாகச் செயல்படக்கூடியவை என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது கேன்சரை உருவாக்கவல்ல அபாயம் கொண்டவை. இந்த நைட்ரைட்டுகள் என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்கள்.
வெறும் சாதத்தை மட்டும் சமைத்து எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் வெரைட்டி ரைஸ், பிரியாணி, முட்டை சாதம் என்று சமைத்துச் சாப்பிட்டு ஒப்பேற்றுகிறவர்கள் இப்போது அதிகமாகி வருகிறார்கள்.

ஆனால், சமைத்த சாதத்தில் இருக்கக் கூடிய பேஸில்லஸ் சிரியஸ் எனும் பாக்டீரியாவானது அறைவெப்ப நிலையில் பல்கிப் பெருகி ஃபுட் பாய்ஸானிங் ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவர்கள் எனவே சாதத்தை ஒரு முறை சமைத்து விட்டால் அதை ஸ்டோர் செய்து வைக்கும் பழக்கத்தை விடுத்து அளவாகச் சமைத்து மீதம் வராமல் பார்த்துக் கொள்வது உத்தமம்.

Tags :
|
|