Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உங்கள் எடையை குறைக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் எடையை குறைக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Mon, 31 Oct 2022 10:47:19 PM

உங்கள் எடையை குறைக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: ஒரு ஆரோக்கியமான ஆணுக்கு தினமும் 2500 கலோரிகள் தேவைப்படுகின்றன அதே போல் ஒரு ஆரோக்கியமான பெண்ணிற்கு தினமும் 2000 கலோரிகள் தேவைப்படுகின்றன.

உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் இந்த கலோரிகளின் அளவு குறைக்க பட வேண்டும். பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களின் உடல் எடையை குறைக்க தினமும் 500 கலோரிகளை குறைக்க வேண்டும்.

நீங்கள் தினமும் 500 கலோரிகளை குறைத்தீர்கள் என்றால் இரண்டு வாரங்களில் உங்கள் எடை ஒரு கிலோ குறைந்திருக்கும். அதெல்லாம் சரி.எப்படி தினமும் 500 கலோரிகள் குறைப்பது?

தினமும் உங்கள் உணவில் 500 கலோரிகள் குறைத்து வந்தால் இரண்டு வாரங்களில் உங்கள் எடை ஒரு கிலோ குறைந்திருக்கும். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்து வந்தால் 500 கலோரிகள் குறையும்.

body weight,fiber,fruit,lunch,spinach ,உடல் எடை, நார்ச்சத்து, பழங்கள், மதிய உணவு, கீரை

இரண்டு வாரங்களில் உங்கள் எடை ஒரு கிலோ குறைந்திருக்கும். இந்த இரண்டையும் (உணவு கட்டுப்பாடு + நடைப்பயிற்சி) சேர்த்து செய்து வந்தால் உங்கள் எடை இரண்டு வாரங்களில் இரண்டு கிலோ குறைந்திருக்கும். இரண்டு வாரங்களில் இரண்டு கிலோ என்றால் ஒரே மாதத்தில் நான்கு கிலோ எடை குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்க நார்ச்சத்து உள்ள உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம். நார்சத்து உள்ள உணவுகள் பசியை குறைத்து விடுவதால் உணவின் தேவையும் குறைகிறது இதனால் நீங்கள் குறைவான அளவு உணவை சாப்பிடுவதால் கலோரிகள் குறைந்து உடல் எடை குறையும் மேலும் நார்சத்துகள் உடலில் கொழுப்பு அதிகம் சேராமல் காக்கும்.

உங்களின் உணவு தட்டில் சாதம் மட்டும் வைத்து கொண்டு காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். தினமும் உங்கள் மதிய உணவில் ஏதாவது ஒரு கீரை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

ஆப்பிள், ஆரஞ்ச் மற்றும் அத்திப்பழம் போன்ற பழங்கள் சாப்பிடுங்கள் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இவை உங்கள் எடையை குறைக்க உதவும்.

Tags :
|
|
|